The Indian Times

வடிவேலு குரலில் ஏஆர் இசையில் வெளியாகியது மாமன்னன் 1st SINGLE

தான் பேசக்கூடாது தனது படம் தான் பேசவேண்டும் என்பதில் உறுதியாக இருப்பவர் இயக்குனர் மாரிசெல்வராஜ்.இவரின் இயக்கத்திற்கு பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது என்று கூறலாம்.தனது இயக்கத்தின் மூலம் பல உண்மை சம்பவங்களை மக்களுக்கு எடுத்துரைத்துள்ளார் இவர்.

ஆரம்பத்தில் ஜாதி ரீதியாக படம் எடுக்கிறார் என்று இவருக்கு எதிராக குற்றசாட்டுகள் வைக்கப்பட்டாலும் ஜாதியினால் ஏற்படும் விளைவுகளை மட்டுமே அவர் தனது படத்தில் உணர்த்தியிருப்பார்.இதனாலேயே இவரது இயக்கத்திற்கு இத்தகைய ரசிகர்கள் கூட்டம் இருக்கின்றது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது 

Advertisement

Embed video credits : SONY MUSIC SOUTH

ஆரம்பத்தில் ஜாதி ரீதியாக படம் எடுக்கிறார் என்று இவருக்கு எதிராக குற்றசாட்டுகள் வைக்கப்பட்டாலும் ஜாதியினால் ஏற்படும் விளைவுகளை மட்டுமே அவர் தனது படத்தில் உணர்த்தியிருப்பார்.இதனாலேயே இவரது இயக்கத்திற்கு இத்தகைய ரசிகர்கள் கூட்டம் இருக்கின்றது.

மாரி செல்வராஜ் கற்றது தமிழ், படத்தில் முதல் முறையாக உதவி இயக்குனராக பணியாற்றினார்.பின்னர் தங்க மீன்கள்,தரமணி போன்ற ராமின் படங்களில் துணை இயக்குனராக பணியாற்றினார்.பின்னர் இயக்கத்தை கற்றுக்கொண்டு இவர் உருவாக்கிய படம் தான் பரியேறும் பெருமாள்.

இப்படம் பெரும் வரவேற்பினை ரசிகர்களிடம் பெற்றது.இப்படத்தினை தொடர்ந்து நடிகர் தனுஷை வைத்து இயக்கம் வாய்ப்பு கிடைத்தது.உடனே தனுஷை வைத்து கர்ணன் படத்தினை இயக்கினார்.இப்படமும் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது.

தற்போது உதயநிதி ஸ்டாலினை வைத்து மாமன்னன் படத்தினை இயக்கி வருகிறார்.இப்படத்தில் நடிகர் வடிவேலு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.கதாநாயகியாக கீர்த்தி சுரேஷ் மற்றும் முக்கிய வேடத்தில் பகத் நடிக்கிறார்.இப்படத்தின் முதல் பாடல் வெளியாகியுள்ளது,இப்பாடலை நடிகர் வடிவேலு, ஏஆர் ரஹ்மான் இசையில் பாடியுள்ளார்.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in