The Indian Times

INTERVAL-க்கு பிறகு வேறே படம் ஓடுது… 2வது பாதி படத்தை ஒப்பேத்தி வச்சிருக்காங்க… மாமன்னன் BLUESATTAI மாறன் REVIEW

தான் பேசக்கூடாது தனது படம் தான் பேசவேண்டும் என்பதில் உறுதியாக இருப்பவர் இயக்குனர் மாரிசெல்வராஜ்.இவரின் இயக்கத்திற்கு பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது என்று கூறலாம்.தனது இயக்கத்தின் மூலம் பல உண்மை சம்பவங்களை மக்களுக்கு எடுத்துரைத்துள்ளார் இவர்.ஆரம்பத்தில் ஜாதி ரீதியாக படம் எடுக்கிறார் என்று இவருக்கு எதிராக குற்றசாட்டுகள் வைக்கப்பட்டாலும் ஜாதியினால் ஏற்படும் விளைவுகளை மட்டுமே அவர் தனது படத்தில் உணர்த்தியிருப்பார்.இதனாலேயே இவரது இயக்கத்திற்கு இத்தகைய ரசிகர்கள் கூட்டம் இருக்கின்றது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

Advertisement

தற்போது உதயநிதி ஸ்டாலினை வைத்து மாமன்னன் படத்தினை இயக்கி வருகிறார்.இப்படத்தில் நடிகர் வடிவேலு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.கதாநாயகியாக கீர்த்தி சுரேஷ் மற்றும் முக்கிய வேடத்தில் பகத் நடிக்கிறார்.இப்படத்தின் ட்ரைலர் அண்மையில் வெளியாகி பெரும் எதிர்பார்ப்பினை உருவாக்கிய நிலையில் இப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியாகி உள்ளது.இப்படத்தினை விமர்சகர் ப்ளூசட்டை மாறன் விமர்சனம் செய்து வீடியோ வெளியிட்டுள்ளார்,

Advertisement

அதில் அவர் கூறியதாவது,படம் இடைவேளையில் முடிந்து விடுகிறது,இடைவேளைக்கு அப்பறம் வேற படம் ஓடுது,அதுவும் மொக்க மசாலா படம் ஓடுது.படத்துல வடிவேலு தான் ஹீரோன்னு சொல்லலாம்.படத்தோட இரண்டாவது பாதியை சும்மா ஒப்பேத்தி வச்சிருக்காங்க,கிளைமாக்ஸ் கொஞ்சம் வித்தியாசமா இருக்கு அவ்வளவுதான் என சாதி பிரச்சனைய படமா எடுக்குறேன்னு ஹீரோ வில்லன் சண்டையை படமா எடுத்து வச்சிருக்காங்க என கூறி விமர்சனம் செய்துள்ளார்.

Embed Video Credits : Tamil Talkies

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in