The Indian Times

விமானத்தில் வித்தியாசமாக திருமணம் செய்து கொண்ட இளம் ஜோடிகள்! எப்படியெல்லாம் யோசிக்குறாங்க.

கொரோனா வைரஸ் நாடு முழுவதும் அதிபயங்கரமாக பரவி வருகிறது. போன வருடம் பாதித்ததை விட இந்த வருடம் அதிகளவில் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. அதிலும் வட இந்தியா பக்கம் அதிகளவில் கொரோனா வைரஸால் பாதிப்பு ஏற்பட்டு உயிர் சேதங்கள் நடந்து வருகிறது. கொரோனா வைரஸை தடுப்பதற்கு தற்போது அரசாங்கமும் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்து வருகிறது.

Advertisement

மாஸ்க் அணியாமல் வெளியே வரக்கூடாது, சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும், அத்தியாவசத்திற்கு மட்டுமே வீட்டை விட்டு வெளியே வர வேண்டும் , அனாவசியமாக வெளியே வர கூடாது என்று பல கட்டுப்பாடுகளை கொண்டு வந்துள்ளனர். தற்போது தமிழகத்தில் முழு ஊரடங்கும் அமலுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. இப்படி அரசாங்கம் பல கட்டுப்பாடுகளை கொண்டு வந்தாலும், பல மக்கள் அதை பின்பற்றுவதில்லை.

Advertisement

கல்யாண வீடுகளில் கூட்டம் சேர கூடாது என்று அரசாங்கம் அறிவித்ததை தொடர்ந்து , இங்கு ஒருவரின் திருமணம் மிகவும் புதுமையாக நடைபெற்றுள்ளது. இதுவரை எவருமே செய்திராத வகையில் விமானத்தில் திருமணம் செய்துள்ளார் இவர். மதுரையை சேர்ந்த இந்த ஜோடிகள் தங்களது திருமணத்தை விமானம் ஒன்று வாடகைக்கு எடுத்து சிறப்பாக செய்துமுடித்துள்ளனர். தற்போது இந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.Watch Video Below – Video Embeded Credits galatta tamil Youtube Channel

https://youtu.be/IOQ6Lj4bQmk?t=9

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in