இனிமே ஜாமீனே கிடையாது..மீரா மிதுனை மீண்டும் அதிரடியாக கைது செய்தது காவல்துறை | Meera Mithun

பட்டியல் இன மக்கள் குறித்து சமூக வலைத்தளங்களில் தனது ஆண் நண்பருடன் சேர்ந்து மிகவும் கீழ்த்தரமாக பேசி சர்ச்சையில் சிக்கியவர் நடிகை மீரா மிதுன். இது குறித்து அளிக்கப்பட்ட புகாரின் பேரில் நடிகை மீரா மிதுனையும், அவருடன் வீடியோவில் இருந்த அவரது நண்பர் அபிஷேக்கையும் கைது செய்து இவர்கள் இருவர் மீதும் 7 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தது மத்திய குற்றப்பிரிவு காவல்துறை. கேரளாவில் தலைமறைவாகியிருந்த இருவரையும் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த நிலையில் மீரா மிதுன் இன்று மீண்டும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இனிமே ஜாமீனே கிடையாது..மீரா மிதுனை மீண்டும் அதிரடியாக கைது செய்தது காவல்துறை | Meera Mithun 1

விளம்பரம்

தானா சேர்ந்ந கூட்டம் உள்ளிட்ட சில படங்களின் மூலம் அறிமுகமானவர் மீரா மிதுன். அதற்கு முன்னதாகவே மாடல் துறையில் இருந்து வருகிறார். தன்னை சூப்பர் மாடல் என்றும் அவர் தன்னை தானே கூறி வந்தார். இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ரியாலிட்டி ஷோவான பிக்பாஸ் நிகழ்ச்சியில் சீசன் 3ல் போட்டியாளராக கலந்து கொண்டார். கலந்து கொண்ட நாள் முதலே ஏதாவது சண்டை, சர்ச்சரவு என அதிருப்தியை ஏற்படுத்தினார். இதனால் அவரை மக்கள் பாதியிலேயே வெளியேற்றினர். வெளியேறிய பின்பும் பெரிதாக எதுவும் பட வாய்ப்புகள் வராத நிலையில் தனது யூடியூப் சேனலில் முண்ணனி நடிகர்கள், இயக்குனர்கள் என அனைவரையும் தரக்குறைவாகவும், ஆபாசமாகவும் விமர்சித்து வந்தார். எதிர்மறை விமர்சனங்கள் மூலம் பிரபலம் ஆகலாம் என்ற கனவில் இருந்தார் மீரா மிதுன். Youtube video code embed credits: Polimer News

இனிமே ஜாமீனே கிடையாது..மீரா மிதுனை மீண்டும் அதிரடியாக கைது செய்தது காவல்துறை | Meera Mithun 2

விளம்பரம்

இந்த சர்ச்சை பேச்சுக்கள் ஒரு கட்டத்தில் அளவு மீறி போக, ஒரு நாள் லைவ்வில் தனது ஆண் நண்பருடன் பட்டியலின சமூக மக்களையும் தவறாக பேசினார். இதனால் கோபமடைந்த சில கட்சிகள் அவர் மீது புகார் அளித்தனர். இதன் பின் கேரளாவில் சென்று தலைமறைவான அவரை அவரது போன் சிக்னல் மூலம் கண்டுபிடித்து கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் சிறையில் அடைத்தனர். சில நாட்கள் ஜெயிலில் இருந்த அவர் ஜாமினில் விடுவிக்கப்பட்டார். மீண்டும் வழக்கில் விசாரணைக்கு ஆஜராக சொல்லி நீதிபதி உத்தரவிட்டும் ஆஜராகாததால் அவரை கைது செய்ய ஜாமினில் அவர் வெளியே வரமுடியாதபடி பிடிவாரண்ட் பிறப்பித்து நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து அவர் மீண்டும் சென்னை சைபர் கிரைம் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். அந்த செய்தியை நீங்களும் காண.. Watch the below video..

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment