ஸ்டாலினுக்கு அகில இந்திய அளவில் முக்கியப் பதவி- ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் திட்டம் என்ன?

அகில இந்திய அளவில் ஆளும் கட்சியை எதிர்ப்பதற்காக பல வியூகங்கள் வகுக்கப்பட்டு வருகின்றது. அதிலும் குறிப்பாக மம்தா பானர்ஜி இந்த முறை மத்திய அரசை ஆட்சியிலிருந்து அகற்றியே ஆக வேண்டும் என்று தீவிரமாக செயல்பட்டு வருகிறார்.அதற்காக அவர் எதிர்க்கட்சிகள் அனைத்தையும் ஒருங்கிணைக்க திட்டமிட்டுள்ளார். அதற்கு முன்னோட்டமாக எதிர்க்கட்சிகளை சேர்ந்த முதலமைச்சர்களை நேரில் சந்தித்து பேசிவுள்ளார். நேற்று தமிழக முதல்வர் மு.க ஸ்டாலினுடன் தொலைபேசியில் பேசிய அவர் டெல்லிக்கு வெளிய எதிர்க்கட்சிகளின் முதலமைச்சர்கள் மாநாடு நடத்தப்படும் என்றும் அதில் மு.க ஸ்டாலின் அவர்களும் கலந்து கொள்ள வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளார். அதற்கு முன்னதாக தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத்பவார் மற்றும் தெலங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ், ஒடிஷா முதல்வரை நவீன் பட்நாயக் ஆகியோரையும் சந்தித்துப் அடிக்கடி பேசி வருகிறார் மம்தா. இதன் மூலம் காங்கிரஸை அல்லாத எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைத்து வருகின்ற 2024 நாடாளுமன்ற தேர்தலை சந்திக்க மம்தா திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. தற்போது தெலங்கானாவில் முதலமைச்சர் சந்திரசேகர் ராவ்க்கும் பாரதிய ஜனதா கட்சிக்கும் மோதல் இருந்து வருகிறது. இதனால் விரைவில் அவர் மமதாவை சந்தித்து பேசுவார் என்று எதிர் பார்க்கப்படுகிறது.

ஸ்டாலினுக்கு அகில இந்திய அளவில் முக்கியப் பதவி- ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் திட்டம் என்ன? 1

விளம்பரம்

காங்கிரஸை விட்டு விட்டு தேர்தலை சந்தித்தால் பாஜக எளிதாக வென்றுவிடும், அதுவே காங்கிரஸை கூட்டணியில் இணைத்து தேர்தலை சந்தித்தால் மிகப்பெரிய வெற்றியை பெறலாம் என்பது கடந்த நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க வழிகாட்டிய கூட்டணிக் கணக்கு. இதை மேற்கோள் காட்டி எதிர்க்கட்சிகள் இணைவதன் முக்கியத்துவத்தை அனைவரிடமும் எடுத்துக்காட்டி பேச்சுவார்த்தையை தொடங்குவார் முக ஸ்டாலின் என தெரிகிறது. இதன்படி இந்தியாவை நான்கு பகுதிகளாகப் பிரித்து 4 தலைவர்களை நியமித்து பணியாற்ற உள்ளதாக தெரிகிறது. அதன்படி தென்னிந்தியாவின் பொறுப்பாளராக தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலினை நியமிக்க கூடும் என்ற பேச்சுகள் எழ தொடங்கி உள்ளன. காங்கிரஸ் உடன் நீண்ட காலமாக நண்பராக இருக்கும் மு.க.ஸ்டாலினால் தென்னிந்தியாவில் உள்ள அனைத்து கட்சிகளையும் காங்கிரஸின் கூட்டணிக்குள் கொண்டு வர முடியும் என உறுதியாக நம்படுகிறது. மேலும் தென்னிந்திய தலைவர்கள் மட்டுமில்லாமல் வட இந்திய தலைவர்கள் அனைவரிடத்திலும் மு.க.ஸ்டாலின் அவர்கள் மீது மிகுந்த மரியாதை வைத்துள்ளனர். கடந்த காலங்களில் அனைத்து மாநிலங்களிலும் முதலமைச்சர் பதவியேற்பு விழாவிற்கு முதலமைச்சராக இருந்த எடப்பாடி பழனிச்சாமியை அழைக்காமல், எதிர்க்கட்சித் தலைவராக இருந்த மு.க.ஸ்டாலினை அழைப்பதையே வழக்கமாக கொண்டிருந்தனர்.

ஸ்டாலினுக்கு அகில இந்திய அளவில் முக்கியப் பதவி- ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் திட்டம் என்ன? 2

விளம்பரம்

எனவேதான் இந்த கூட்டணியை ஏற்ப்படுத்துவதிலும், தென்னிந்தியாவில் அனைத்து கட்சிகளை ஒருங்கிணைப்பதிலும் மு.க.ஸ்டாலினை முன்னிறுத்துவதில் மற்ற கட்சிகள் மும்முரம் காட்டி வருகின்றன. இதற்கு காங்கிரஸ் கட்சியும் சம்மதம் தெரிவித்துள்ளதாக தெரிகிறது. இந்த திட்டம் வெற்றி பெற்றால் மட்டுமே அடுத்து வரும் தேர்தலில் எதிர்க்கட்சிகள் ஆட்சியை பிடிக்க முடியும் என்று மக்கள் நம்ப தொடங்கி விட்டனர். இந்த 5 மாநில தேர்தல் முடிவடைந்த பிறகுதான் உண்மை நிலை தெரிய வரும் . 2024 தேர்தலுக்கு இரண்டு ஆண்டுகளே உள்ள நிலையில் என்ன நடக்க இருக்கிறது என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment