The Indian Times

இயக்குனர் மிஷ்கின் இசையமைக்கும் டெவில் படத்தின் FIRST SINGLE இதோ…

சித்திரம் பேசுதடி படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்குள் களம் இறங்கியவர் இயக்குனர் மிஸ்கின்.இப்படம் நல்ல வரவேற்பை இவருக்கு பெற்றுத்தந்தது.இதனை தொடர்ந்து வெளியாகிய அஞ்சாதே படம் இவரை தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத இயக்குனராக ஆக்கியது.

அதன்பின்னர் சில வெற்றி தோல்வி என படங்களை மாறி மாறி கொடுத்துள்ளார்.தற்போது இவருக்கென ஒரு ரசிகர்கள் கூட்டமே உள்ளது.கீழே வீடியோ கொடுக்கப்பட்டுள்ளது

Advertisement

Embed Video Credits : SONY MUSIC SOUTH

இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில் நடிகர் நாகா நடிப்பில் 2014 ஆம் ஆண்டு வெளியாகிய படம் பிசாசு.இப்படத்தில்இவருடன் ராதா ரவி,பிரக்யா,ஹரிஷ் உத்தமன் ஆகியோர் நடித்திருந்தனர்.இப்படம் நல்ல வரவேற்பை பெற்றது.

இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து சுமார் வருடங்கள் கழித்து பிசாசு படத்தின் இரண்டாம் பாகம் வெளியாக உள்ளது.மேலும் சிவகார்த்திகேயனின் மாவீரன் படத்தில் வில்லனாகவும் நடித்து வருகிறார் மிஸ்கின்.

தற்போது இசையமைப்பாளராகவும் சினிமாவில் நுழைந்துள்ளார்,நடிகர் விதார்த் மற்றும் பபூர்ணா நடிக்கும் டெவில் படத்தில் இசையமைத்துள்ளார்.இப்படத்தில் இடம்பெற்றுள்ள கலவி பாடல் வெளியாகியுள்ளது,மிஷ்கின் இசையினை அனைவரும் வெகுவாக பாராட்டி .வருகின்றனர்.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in