நயன் விக்கிக்கு குழந்தை பெற்றுக்கொடுத்த வாடகை தாய் குறித்த ஆவணங்கள் இல்லை – சுகாதாரத்துறை தகவல்

தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா. இவருக்கு பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது.ஆரம்பத்தில் தொகுப்பாளினியாக தனது வாழ்க்கையை தொடங்கிய இவர் தற்போது உச்ச நட்சத்திரமாக சினிமாவில் ஜொலித்து வருகிறார்.தமிழ் சினிமாவில் இருக்கும் அணைத்து முன்னனி நட்சத்திரங்களுடன் நடித்து விட்டார் நயன்தாரா.தற்போது பாலிவுட்டில் ஷாருக்கானுக்கு ஜோடியாக ஜவான் படத்தில் நடித்து வருகிறார் நயன்தாரா.

நயன் விக்கிக்கு குழந்தை பெற்றுக்கொடுத்த வாடகை தாய் குறித்த ஆவணங்கள் இல்லை - சுகாதாரத்துறை தகவல் 1

விளம்பரம்

இவர் இயக்குனர் விக்னேஷ் சிவனை சுமார் 7 ஆண்டுகளுக்கு மேலாக காதலித்து வந்தார்.ஜூன் 9 ஆம் தேதி இயக்குனர் விக்னேஷ் சிவனை திருமணம் செய்துகொண்டார்.இவர்களின் திருமணம் உறவினர்கள் மட்டும் நட்சத்திரங்களுடன் தனியார் ஹோட்டலில் நடைபெற்றது.இந்த புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இயக்குனர் விக்னேஷ் சிவன் பதிவிட்டு இருந்தார்.புகைப்படம் இணையத்தில் பெருமளவு வைரலாகி வருகிறது.

கட்டாயம் படிக்கவும்  இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷின் திருமண புகைப்படங்கள் இதோ

நயன் விக்கிக்கு குழந்தை பெற்றுக்கொடுத்த வாடகை தாய் குறித்த ஆவணங்கள் இல்லை - சுகாதாரத்துறை தகவல் 2

விளம்பரம்

இந்நிலையில் திருமணம் முடிந்த நான்கு மாதங்களிலேயே நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் இரட்டை குழந்தைகளுக்கு பெற்றோர்கள் ஆகியதாக தெரிவித்திருந்தார்.இதுகுறித்து விசாரித்தபொழுது வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொண்டது தெரியவந்துள்ளது.இது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.தமிழகத்தில்வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொள்ள சில விதிமுறைகள் உள்ளன,அதாவது திருமணம் ஆகி 5 ஆண்டுகள் ஆகியிருக்க வேண்டும்,தம்பதியில் ஒருவர் குழந்தைப்பெற தகுதி இல்லாதவர்களாக இருக்க வேண்டும்,தம்பதிக்கும் வாடகைத்தாய்க்கும் தகுதி சான்றிதழ் கட்டாயம் மற்றும் ஒரு பெண் ஒருமுறை தான் வாடகை தாயாக இருக்க முடியும் ,நெருங்கிய உறவுகள் மட்டுமே வாடகை தாயாக இருக்க வேண்டும் என சில விதிமுறைகள் உள்ளன.

கட்டாயம் படிக்கவும்  நானே பெரிய தளபதி ரசிகை... தளபதி பாடலுக்கு ஆட்டம் போட்ட அதிதி சங்கர்

நயன் விக்கிக்கு குழந்தை பெற்றுக்கொடுத்த வாடகை தாய் குறித்த ஆவணங்கள் இல்லை - சுகாதாரத்துறை தகவல் 3

விளம்பரம்

இந்த விதிமுறைகளை மீறியதாக விக்னேஷ் சிவன் நயன்தாரா மீது புகார் கிளம்பியது.இதுகுறித்து தற்போது சுகாதாரத்துறை விசாரித்து அறிக்கை வெளியிட்டுள்ளது.அதன்படி விக்னேஷ் சிவனுக்கும் நயன்தாராவுக்கும் 11.03.2016ல் பதிவு திருமணம் செய்யப்பட்டுள்ளது. வாடகை தாய் மூலம் குழந்தை பெற விதிமுறைகளை கடைபிடித்துள்ளனர். 2021 ஆம் ஆண்டு வாடகை தாய் ஒப்பந்தம் போடப்பட்டு கருமுட்டை செலுத்தப்பட்டுள்ளது.மேலும் வாடகை தாய் உடல்நலம் குறித்து சரியான ஆவணங்கள் முறையாக மருத்துவமனையால் பின்பற்றவில்லை ,சிகிச்சை அளித்த டாக்டரும் வெளிநாடு சென்றுவிட்டதால் விசாரணை நடத்த முடியவில்லை என அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment