நாமக்கல் மாவட்டத்தில் இயங்கி வரும் அரசு மகளிர் கல்லூரி ஒன்றில் படிக்கும் தனது காதலியான மாணவியைத் தேடி கையில் தாலியுடன் நுழைந்த இளைஞன் அந்த காதலியிடம் சிறிது நேரம் பேசி அந்த பெண்ணை இறுக்கிப் பிடித்த கையில் இருந்த தாலியை காதலியின் கழுத்தில் கட்ட முயன்றுள்ளான். தாலி கட்டிக்கொள்ள விருப்பமில்லாத அந்த மாணவி கத்தி கூச்சலிட்டு உதவிக்கு மற்றவர்களை அழைத்துள்ளார்.
மிகவும் போராடி ஒரு கட்டத்தில் அந்த மாணவி அந்த இளைஞனின் பிடியில் இருந்து தப்பி கல்லூரிக்குள் ஓடி சென்றுள்ளார்.அந்த இளைஞன் விடாமல் அந்த மனைவியை கல்லூரிக்குள் துரத்திச்சென்றுள்ளார். இதை பார்த்த அங்கிருரிந்தவர்கள் உடனடியாக காவல்துறைக்கு தகவல் கொடுத்துள்ளனர்.
காவல்துறையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்து இளைஞரை [பிடித்து நடத்திய விசாரணையில் இந்த இளைஞருக்கு மாணவிக்கும் ஏற்கனவே நிச்சயம் ஆனது தெரிய வந்தது. போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்தசம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியும், பரபரப்பும் ஏற்பட்டது.
Video Credits: THANTHI TV Youtube Channel
Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in