The Indian Times

மாமா நல்ல கிட்ட வந்து நில்லு….ROMANCE-ல் விக்னேஷ் சிவனை மிஞ்சிய நயன்தாரா

சினிமா உலகமே எதிர்பார்த்து காத்துக்கொண்டிருந்த நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் திருமணம் ஆனது சென்னையில் கோலாகலமாக நடைபெற்றது..பாலிவுட் முதல் கோலிவுட் வரை என அனைத்து சினிமா பிரபலங்களும் கலந்துகொண்டனர்.நானும் ரவுடி தான் என்ற படத்தின் விக்னேஷ் சிவன் நயன்தாராவை கதாநாயகியாக வைத்து இயக்கிய நிலையில்,இவர்களுக்குள் ஏற்பட்ட நட்பு ஆனது நாளடைவில் காதலாக மாறியது.இந்த காதல் எப்பொழுது திருமணத்தில் முடியும் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருந்த நிலையில் கடந்த ஜூன் 9 ஆம் தேதி சென்னையில் மகாபலிபுரம் பகுதியில் உள்ள தனியார் நட்சத்திர ஹோட்டலில் இவர்களது திருமணம் நடைபெற்றது.

Advertisement

திருமணம் முடிந்த கையேடு ஹனிமூன் இருவரும் சென்றுவிட்டனர்.ஹனி மூன் சென்ற ஜோடிக்கு படத்தின் வேலைகள் அதிகமாக இருந்ததால் உடனடியாக நாடு திரும்பினர்.படத்தின் வேலைகளை முடித்துவிட்டு மீண்டும் இரண்டாவது ஹனிமூனுக்கு ஸ்பெயின் நாட்டிற்கு சென்றனர்.அங்கு இவர்கள் எடுத்த புகைப்படம் மற்றும் வீடியோவை விக்னேஷ் சிவன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவேற்ற அவை அனைத்தும் மிகப்பெரிய அளவு வைரலாகியது

Advertisement

தற்போது விக்னேஷ் சிவன் பிறந்தநாளை கொண்டாடும் வகையில் அவருக்கு சர்ப்ரைஸ் கொடுக்க அவரது பிறந்தநாளை துபாயில் உள்ள புர்ஜ் கலீபா கீழே நயன்தாரா கொண்டாடியுள்ளார்.அப்பொழுது இருவரும் ரொமேன்டிக் ஆக புகைப்படம் எடுத்துள்ளனர்.இந்த புகைப்படத்தினை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவேற்றியுள்ளார் விக்னேஷ் சிவன்.இந்த புகைப்படங்கள் இணையத்தில் பெருமளவு வைரலாகி வருகிறது.இதனை பார்த்த ரசிகர்கள் விக்னேஷ் சிவனுக்கு தங்களது பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in