சினிமா உலகமே எதிர்பார்த்து காத்துக்கொண்டிருந்த நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் திருமணம் ஆனது சென்னையில் கோலாகலமாக நடைபெற்றது..பாலிவுட் முதல் கோலிவுட் வரை என அனைத்து சினிமா பிரபலங்களும் கலந்துகொண்டனர்.நானும் ரவுடி தான் என்ற படத்தின் விக்னேஷ் சிவன் நயன்தாராவை கதாநாயகியாக வைத்து இயக்கிய நிலையில்,இவர்களுக்குள் ஏற்பட்ட நட்பு ஆனது நாளடைவில் காதலாக மாறியது.இந்த காதல் எப்பொழுது திருமணத்தில் முடியும் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருந்த நிலையில் கடந்த ஜூன் 9 ஆம் தேதி சென்னையில் மகாபலிபுரம் பகுதியில் உள்ள தனியார் நட்சத்திர ஹோட்டலில் இவர்களது திருமணம் நடைபெற்றது.
திருமணம் முடிந்த கையேடு திருப்பதிக்கு சாமி தரிசனம் செய்தனர்,பின்னர் அங்கிருந்து கேரளா புறப்பட்டு சென்று நயன்தாரா வீட்டில் தங்கி இருந்தனர்.மேலும் அங்கிருந்து நேராக ஹனிமூன்க்காக தாய்லாந்து புறப்பட்டு சென்றனர்.கிளம்பும் பொழுது இவர்கள் விமான நிலையம் வந்த புகைப்படம் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் பெருமளவு வைரலாகியது.மேலும் தாய்லாந்தில் தனது மனைவியுடன் விக்னேஷ் சிவன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தினை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டார்.இந்த புகைப்படங்கள் பெரிதளவு இணையத்தில் வைரலாகியது.தற்போது அனைவரும் நயன்தாரா விக்கி தற்போது எங்கு உள்ளார்கள் என்ற அப்டேட்டுகளை விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தின் மூலம் வழங்கி வருகிறார்.
தற்போது தேன் நிலவுக்கு சென்ற நயன்தாராவும்,விக்னேஷ் சிவனும் விடுமுறை முடித்து அங்கிருந்து கிளம்பியுள்ளனர்.இதனை விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.மேலும் தங்களை சிறப்பாக கவனித்த ஹோட்டல் ஊழியர்களுக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.அங்கிருந்து அவர்கள் நாடு திரும்புகிறார்களா அல்லது வேறு எந்த நாட்டுக்கும் பயணிக்க இருக்கிறார்களா என்பது தெரியவில்லை,விரைவில் விக்னேஷ் சிவன் அதனை தெரிவிப்பார் என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.ஏனெனில் இருவருக்கும் பட வேலைகள் அதிகம் இருக்கும் நிலையில் தங்களது பிஸியான நேரத்தில் ஹனிமூன் சென்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in