The Indian Times

யாரு சொன்னா விதிகளை மீறினோம்னு எங்களுக்கு திருமணம் ஆகி 6 வருஷம் ஆகுது-அறிக்கை சமர்ப்பித்த நயன் விக்கி

தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா. இவருக்கு பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது.ஆரம்பத்தில் தொகுப்பாளினியாக தனது வாழ்க்கையை தொடங்கிய இவர் தற்போது உச்ச நட்சத்திரமாக சினிமாவில் ஜொலித்து வருகிறார்.தமிழ் சினிமாவில் இருக்கும் அணைத்து முன்னனி நட்சத்திரங்களுடன் நடித்து விட்டார் நயன்தாரா.தற்போது பாலிவுட்டில் ஷாருக்கானுக்கு ஜோடியாக ஜவான் படத்தில் நடித்து வருகிறார் நயன்தாரா.

Advertisement

இவர் இயக்குனர் விக்னேஷ் சிவனை சுமார் 7 ஆண்டுகளுக்கு மேலாக காதலித்து வந்தார்.ஜூன் 9 ஆம் தேதி இயக்குனர் விக்னேஷ் சிவனை திருமணம் செய்துகொண்டார்.இவர்களின் திருமணம் உறவினர்கள் மட்டும் நட்சத்திரங்களுடன் தனியார் ஹோட்டலில் நடைபெற்றது.இந்த புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இயக்குனர் விக்னேஷ் சிவன் பதிவிட்டு இருந்தார்.புகைப்படம் இணையத்தில் பெருமளவு வைரலாகி வருகிறது.

Advertisement

இந்நிலையில் திருமணம் முடிந்த நான்கு மாதங்களிலேயே நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் இரட்டை குழந்தைகளுக்கு பெற்றோர்கள் ஆகியதாக தெரிவித்திருந்தார்.இதுகுறித்து விசாரித்தபொழுது வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொண்டது தெரியவந்துள்ளது.இது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.தமிழகத்தில்வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொள்ள சில விதிமுறைகள் உள்ளன,அதாவது திருமணம் ஆகி 5 ஆண்டுகள் ஆகியிருக்க வேண்டும்,தம்பதியில் ஒருவர் குழந்தைப்பெற தகுதி இல்லாதவர்களாக இருக்க வேண்டும்,தம்பதிக்கும் வாடகைத்தாய்க்கும் தகுதி சான்றிதழ் கட்டாயம் மற்றும் ஒரு பெண் ஒருமுறை தான் வாடகை தாயாக இருக்க முடியும் ,நெருங்கிய உறவுகள் மட்டுமே வாடகை தாயாக இருக்க வேண்டும் என சில விதிமுறைகள் உள்ளன.

இந்த விதிமுறைகளை மீறியதாக விக்னேஷ் சிவன் நயன்தாரா மீது புஹாரி கிளம்பியது.அரசு சார்பில் இவர்களிடம் விசாரிக்க குழு அமைக்கப்பட்டுள்ளது.தற்போது இதுகுறித்து நயன்தாரா விக்னேஷ் சிவன் தரப்பினர் கூறியதாவது, கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்னரே நாங்கள் பதிவு திருமணம் செய்துவிட்டோம்,மேலும் கடந்த டிசம்பர் மாதம் வாடகை தாய் முறையில் குழந்தை பெற பதிவு செய்துவிட்டதாகவும் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது மேலும் ஜூன் மாதத்தில் வாடகை தாய் சட்டம் வந்துள்ளதால் அது தங்களை கட்டுப்படுத்தாது என குறிப்பிட்டுள்ளனர்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in