The Indian Times

முதல்வர் ஸ்டாலினை நேரில் சந்தித்த நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன்

போடா போடி படத்தின் மூலம் சினிமாவிற்கு இயக்குனராக அறிமுகம் ஆகியவர் விக்னேஷ் சிவன்.இப்படத்தில் இவருக்கு எதிர்பார்த்த வரவேற்பு கிடைக்கவில்லை.இருப்பினும் நம்பிக்கையை தளரவிடாமல் தொடர்ந்து முயற்சி செய்து விஜய் சேதுபதி மற்றும் நயன்தாராவை வைத்து நானும் ரவுடி தான் என்ற படத்தினை இயக்கினார்.இந்த படம் மாபெரும் வரவேற்பினை பெற்றது.இப்படத்தில் நயன்தாராவுடன் விஜய் சேதுபதிக்கு ஏற்பட்ட பழக்கம் நட்பாக மாறி இறுதியில் காதலாக மாறியது.

Advertisement

நயன்தாராவிற்கு விக்னேஷ் சிவனுக்கும் இடையே இருக்கும் காதல் சினிமா உலகம் மற்றும் வெளி உலகம் அறிந்தது.காதல் பறவைகளாக பறந்துவரும் இருவருக்கும் திருமணம் எப்பொழுது என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.இந்நிலையில் திருமணம் குறித்து குறி கேட்க அண்மையில் விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா இருவரும் குலதெய்வம் கோவிலில் சென்று பொங்கல் வைத்து வழிபட்டனர்.இதனால் திருமணம் குறித்து விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது.சினிமா ரசிகர்களே இவர்களது திருமணத்திற்காகத்தான் காத்திருக்கின்றனர்.

Advertisement

இந்நிலையில் ஜூன் 9 ஆம் தேதி இவர்களது திருமணம் திருப்பதியில் வைத்து நடைபெற இருப்பதாகவும்,பின்னர் அங்கு இருந்து மாற்றம் செய்யப்பட்டு திருமணம் சென்னையில் நடைபெற இருப்பதாகவும் பல தகவல்கள் பரவி வருகிறது.இந்நிலையில் முதல்வர் ஸ்டாலினை நேற்று நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் ஆகிய இருவரும் நேரில் சந்தித்துள்ளனர்.இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.முதல்வரை சந்தித்து தங்களது திருமண பத்திரிகையை வழங்கியுள்ளதாக சில செய்திகள் பரவி வருகிறது.முதல்வர் ஸ்டாலினுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தில் நயன்தாரா கையில் பத்திரிக்கை போன்ற ஒன்றை தான் வைத்துள்ளார்,இதனால் பத்திரிகை வைத்து அழைப்பு வைத்திருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in