வாடகை தாய் மூலம் குழந்தை..நயன்தாரா எடுத்த முடிவு..கடுமையாக விமர்சித்த பயில்வான் | Nayanthara

விளம்பரம்
விளம்பரம்

நடிகை நயன்தாராவும், விக்னேஷ் சிவனும் பல வருடங்களாக காதலித்து வருகின்றனர். அடிக்கடி கோவிலுக்கு செல்வது, வெளிநாடு செல்வது, ட்ரிப் போவது என்று இருவரும் சந்தோஷமாக வாழ்ந்து வருகின்றனர். சமீபத்தில் இவர்கள் சென்னையில் உள்ள காளிகாம்பாள் கோவிலுக்கு சென்றனர். அப்போது அவர் திருமணமானவர் போல நெற்றியில் குங்குமம் வைத்து இருந்தார். இதனால் இருவருக்கும் திருமணம் முடிந்துவிட்டது என்று சிலர் புரளியை கிளப்பி வருகின்றனர். வேறு சிலரோ விக்னேஷ் மற்றும் நயன்தாராவுக்கு நிச்சயம் முடிந்துள்ளது, இந்த வருட இறுதியில் திருமணம் செய்து கொள்வார்கள் என்று தங்கள் பங்கிற்கு ஒரு கதையை சொல்லி வருகின்றனர்.

கட்டாயம் படிக்கவும்  சிவாஜியாகவே வாழும் சிவாஜி ரசிகர்..அச்சு அசல் இருப்பதால் ரசிகர்கள் ஆச்சரியம்

வாடகை தாய் மூலம் குழந்தை..நயன்தாரா எடுத்த முடிவு..கடுமையாக விமர்சித்த பயில்வான் | Nayanthara 1

விளம்பரம்

நயன்தாராவை பொறுத்தவரை தமிழ் சினிமாவில் அசைக்க முடியாத ஒருவர். கேரள மாநிலத்தில் பிறந்து வளர்ந்து ஒரு சிறிய தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக தனது வாழ்க்கையை ஆரம்பித்து பின்னர் தனது கடுமையான முயற்சி மற்றும் திறமையால் படிப்படியாக உயர்ந்து இன்று தமிழ்நாட்டின் லேடி சூப்பர் ஸ்டாராக உயர்ந்துள்ளார். ஐயா என்ற தமிழ்படம் மூலம் கதாநாயகியாக அறிமுகம் ஆனார். பின்னர் பிரபு தேவாவுடன் காதல் ஏற்பட்டது. அந்த காதல் முறிவுக்குப் பின்னர் இயக்குனர் விக்னேஷ் சிவனுடன் லிவ்விங் வாழ்க்கையில் உள்ளார். நயன்தாரா சில படங்களில் நடித்து வருகிறார். விக்னேஷ் சிவன் பட ஷூட்டிங்கில் பிஸியாக உள்ளனர். Youtube Video Code Embed Credits: i Tamil News

வாடகை தாய் மூலம் குழந்தை..நயன்தாரா எடுத்த முடிவு..கடுமையாக விமர்சித்த பயில்வான் | Nayanthara 2

விளம்பரம்

இந்த நிலையில் தற்போது நயன்தாராவைப் பற்றி ஒரு தகவல் தீயாக பரவி வருகிறது. அதில் நயன்தாரா விக்னேஷ் சிவன் இருவரும் வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொள்ள விரும்புவதாக தெரிகிறது. பாலிவுட் நடிகைகளான பிரியங்கா சோப்ரா, ஷில்பா ஷெட்டி ஆகியோர் வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற்றுள்ளனர். அதே வழியை பின்பற்றி நயன்தாராவும் குழந்தை பெற்றுக் கொள்ள திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் ஆகிய இருவருமே தங்களது வாழ்க்கை குறித்த திட்டங்கள் பற்றி இதுவரை பொது வெளியில் பேசியதே இல்லை. ஆனால் இந்த விஷயத்தை பயில்வான் ரங்கநாதன் கடுமையாக விமர்சித்துள்ளார். நயன்தாராவுக்கு வயதாகிவிட்டது என்றும் இனிமேல் அவரால் குழந்தை பெற்றுக் கொள்ள முடியாது என்றும் அதனால் வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றுக் கொள்ள உள்ளதாகவும் மோசமான வார்த்தைகளில் நயன்தாராவை விமர்சித்தார். அந்த காணொலியை நீங்களும் காண.. Watch the Below Video…

கட்டாயம் படிக்கவும்  சிவாஜியாகவே வாழும் சிவாஜி ரசிகர்..அச்சு அசல் இருப்பதால் ரசிகர்கள் ஆச்சரியம்

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment