சினிமா உலகமே எதிர்பார்த்து காத்துக்கொண்டிருந்த நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் திருமணம் ஆனது சென்னையில் கோலாகலமாக நடைபெற்றது..பாலிவுட் முதல் கோலிவுட் வரை என அனைத்து சினிமா பிரபலங்களும் கலந்துகொண்டனர்.நானும் ரவுடி தான் என்ற படத்தின் விக்னேஷ் சிவன் நயன்தாராவை கதாநாயகியாக வைத்து இயக்கிய நிலையில்,இவர்களுக்குள் ஏற்பட்ட நட்பு ஆனது நாளடைவில் காதலாக மாறியது.இந்த காதல் எப்பொழுது திருமணத்தில் முடியும் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருந்த நிலையில் கடந்த ஜூன் 9 ஆம் தேதி சென்னையில் மகாபலிபுரம் பகுதியில் உள்ள தனியார் நட்சத்திர ஹோட்டலில் இவர்களது திருமணம் நடைபெற்றது.
திருமணம் முடிந்த உடன் இருவரும் தாய்லாந்து நாட்டிற்கு ஹனிமூன் சென்றுவிட்டனர்.ஹனி மூன் சென்ற ஜோடிக்கு படத்தின் வேலைகள் அதிகமாக இருந்ததால் உடனடியாக நாடு திரும்பினர்.படத்தின் வேலைகளை முடித்துவிட்டு மீண்டும் இரண்டாவது ஹனிமூனுக்கு ஸ்பெயின் நாட்டிற்கு சென்றனர்.அங்கு இவர்கள் எடுத்த புகைப்படம் மற்றும் வீடியோவை விக்னேஷ் சிவன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவேற்ற அவை அனைத்தும் மிகப்பெரிய அளவு வைரலாகியது.
நயன்தாரா விக்னேஷ் சிவன் பிறந்தநாளை துபாயில் கோலாகலமாக கொண்டாடியுள்ளார்.இந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி பெருமளவு வைரலாகியது.விக்னேஷ் சிவன் சகோதரி,அம்மா மற்றும் நண்பர்கள் என பலரும் கலந்துகொண்டுள்ளனர்.தற்போது ரொமான்சில் தமிழ் சினிமாவையே மிஞ்சும் அளவுக்கு இருவரும் புகைப்படம் எடுத்துள்ளனர்,இதனை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் விக்னேஷ் சிவன்.இந்த புகைப்படம் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வைரலாகி வருகிறது
Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in