The Indian Times

திருமணத்திற்கு முன்பே முக்கிய முடிவை எடுத்த நயன்தாரா விக்னேஷ் சிவன்

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர் விக்னேஷ் சிவன்.இவர் இயக்கத்தில் விஜய் சேதுபதி,நயன்தாரா,சமந்தா நடித்துள்ள காத்து வாக்குல ரெண்டு காதல் திரைப்படம் அண்மையில் வெளியாகியது.ஆரம்பத்தில் நடிகர் விஜய் சேதுபதியை வைத்து நானும் ரவுடிதான் படத்தினை இயக்குனர் விக்னேஷ் இயக்கினார்.இப்படத்தில் கதாநாயகியாக நயன்தாரா நடித்தார் .இந்த படத்தில் இருவருக்கும் ஏற்பட்ட நட்பு நாளடைவில் காதலாக மாறியது.இவர்கள் இருவருக்கும் பெரிய ரசிகர்கள் கூட்டமே உள்ளது.இவர்கள் எப்பொழுது திருமணம் செய்துகொள்வார்கள் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து கார்த்துக்கொண்டிருக்கின்றனர்.

Advertisement

தற்போது நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் ஜூன் மாதத்தில் திருமணம் செய்துகொள்ள இருப்பதாக செய்திகள் வெளியாகியது.ஆனால் இதுகுறித்து இவர்கள் இதுவரை எந்த அறிவிப்பையும் தெரிவிக்கவில்லை.விரைவில் இதுகுறித்து அறிவிப்பினை வெளியிடுவார்கள் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்,இந்நிலையில் திருமணத்திற்கு பிறகு மேற்கொள்ள இருக்கும் சில முக்கிய முடிவுகளை தற்பொழுது முன்பே எடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது

Advertisement

இந்நிலையில் இவர்களது திருமணத்திற்கு பிறகு விக்னேஷ் சிவனுக்கு தல அஜித்துடன் பட வேலைகள் இருப்பதாலும் அதேபோல் நயன்தாராவும் அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடிப்பில் புதிய படத்தில் நடித்து வருகிறார் மேலும் புதிய படத்தில் ஒப்பந்தமாகி இருப்பதால் இருவரும் பிசியாக இருப்பதால் திருமணத்திற்கு பிறகு இவர்கள் ஹனிமூன் செல்லும் பிளான் இல்லை என தற்போது தகவல் வெளியாகி இருக்கிறது

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in