The Indian Times

4 மாசத்துல நயன்தாராவுக்கு குழந்தை பொறந்தது இப்படித்தானா?சிக்கலில் சிக்கிய நயன்தாரா

தமிழ் சினிமாவில் ஐயா படத்தின் மூலம் சினிமாவிற்கு அறிமுகம் ஆகியவர் நடிகை நயன்தாரா. இப்படத்தில் நல்ல வரவேற்பினை பெற்று முதல் படத்திலேயே முன்னணி நடிகையாக உருவெடுத்தார். தமிழ் சினிமாவில் இவருக்கு பெரும் ரசிகர்கள் கூட்டம் உள்ளது.தொகுப்பாளராக தான் வாழ்க்கையை தொடங்கியவர் இன்று இன்று தனது கடின உழைப்பினால் லேடி சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்தினை மக்களிடம் வாங்கியுள்ளார்.தற்போது இவர் கதாநாயகியாக மட்டும் இல்லாமல் கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களிலும் நடித்து வருகிறார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

Advertisement

இவர் இயக்குனர் விக்னேஷ் சிவனை சுமார் 7 ஆண்டுகளுக்கு மேலாக காதலித்து வந்தார்.ஜூன் 9 ஆம் தேதி இயக்குனர் விக்னேஷ் சிவனை திருமணம் செய்துகொண்டார்.இவர்களின் திருமணம் உறவினர்கள் மட்டும் நட்சத்திரங்களுடன் தனியார் ஹோட்டலில் நடைபெற்றது.இந்த புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நடிகை நயன்தாரா பதிவிட்டு இருந்தார்.மேலும் இவர்கள் தங்களது திருமண வீடியோவை நெட்பிளிக்ஸ் தளத்திற்கு விற்பனை செய்துள்ளனர்.

Advertisement

இந்நிலையில் நேற்று விக்னேஷ் சிவன் தாங்கள் இரட்டை குழந்தைகளுக்கு அம்மா அப்பா ஆகியதாக குறிப்பிட்டுள்ளார்.இது பெரும் அதிர்ச்சியை ரசிகர்களிடம் ஏற்படுத்தியுள்ளது.திருமணம் முடிந்து சில நாட்களே ஆன நிலையில் இவர்கள் எப்படி குழந்தை பெற்றுக்கொண்டார்கள் என்று ரசிகர்கள் குழம்பி வருகின்றனர்.இந்நிலையில் நயன்தாரா விக்னேஷ் சிவன் ஜோடி வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.இவ்வாறு குழந்தை பெற்றுக்கொள்ள பல விதிமுறைகள் உள்ளது ,மேலும் குறிப்பாக வாடகை தாய் மூலம் குழந்தை பெற விரும்பும் தம்பதிகளுக்கு திருமணம் ஆகி குறைந்தது 5 ஆண்டுகள் ஆகியிருக்க வேண்டுமாம்.எனவே இதனால் நயன்தாரா சிக்கலில் சிக்கியுள்ளார் ,இதற்கு நயன்தாரா முறையான பதிலளிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது

Embed video credits : Polimer TV

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in