பேச தெரியாம பேசிடுச்சு..ஒரு நிமிஷத்துல எடை போடாதீங்க.. நீயா நானா தாய்க்கு ஆதரவாக பேசிய கவிஞர் தாமரை

நீயா நானாவில் கலந்து கொண்டு, கடந்த இரண்டு நாட்களாக பேசப்பட்டு வரும் வைரல் தம்பதிகள் தற்போது தனியார் யூடியூப் தொலைக்காட்சி ஒன்றில் பேட்டி ஒன்றை அளித்துள்ளனர். அதில் பல விஷயங்களை அவர்கள் கூறியிருக்கிறார்கள். படிக்காத தனது கணவரை கேலி செய்ததாக மீம்ஸ்களால் வறுத்து எடுக்கப்படும் அந்தப் பெண் தற்போது பல விஷயங்களை பகிர்ந்து இருக்கிறார். தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் சீனி ராஜா – பாரதி தம்பதி. இதில் சீனி ராஜா 2002 ஆம் ஆண்டே வேலை தேடி சென்னைக்கு வந்துள்ளார். ஒன்பதாம் வகுப்பு வரை மட்டுமே படித்திருக்கும், அவர் அங்கு ஒரு மளிகை கடையில் வேலை பார்த்து வந்தார். இடையில் படித்த பெண்ணான பாரதியை திருமணம் செய்து வைத்துள்ளனர். இருவரும் சென்னையில் ஒன்றாக வசித்து வருகின்றனர். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

பேச தெரியாம பேசிடுச்சு..ஒரு நிமிஷத்துல எடை போடாதீங்க.. நீயா நானா தாய்க்கு ஆதரவாக பேசிய கவிஞர் தாமரை 1

விளம்பரம்

திருமணத்திற்கு பின்பு வேலைக்கு எதுவும் போகாமல் இருந்த சீனி ராஜா, மனைவியின் நகைகளை வாங்கி வங்கியில் அடகு வைத்து சுயமாக தொழில் தொடங்குவதாக கூறி இருக்கிறார். இதன்படி அவர் முதலில் முட்டை கடை, தக்காளி வியாபாரம், அரிசி கடை, மளிகை கடையென ஒவ்வொன்றாக நடத்தி ஒவ்வொன்றிலும் நஷ்டமே மிஞ்சி இருக்கிறது. மனைவி பாரதியின் நகைகள் அனைத்தும் கடனில் மூழ்கி போக, எதையும் மீட்கவும் முடியாமல் கடையும் நடத்த முடியாமல் கஷ்டப்பட்டு வந்துள்ளார் சீனி ராஜா. இந்த நிலையில் தான் மனைவியை வேலைக்கு அனுப்பி இருக்கிறார். மனைவியும் ஆரம்பத்தில் வேண்டா வெறுப்பாக வேலைக்குச் சென்று வந்துள்ளார். பின்னர் சீனி ராஜாவிற்கு உடல் நலம் சரியில்லாமல் போயிருக்கிறது. அவர் கிட்னி இரண்டும் சுருங்கியதால் வாரம் இரு முறை டயாலிசிஸ் செய்ய வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தி இருக்கின்றனர்.

கட்டாயம் படிக்கவும்  அம்மா அப்பாவின் 30வது திருமணநாளை கொண்டாடிய ஷ்ரேயா சித்து

பேச தெரியாம பேசிடுச்சு..ஒரு நிமிஷத்துல எடை போடாதீங்க.. நீயா நானா தாய்க்கு ஆதரவாக பேசிய கவிஞர் தாமரை 2

விளம்பரம்

இதனால் வாரம் இருமுறை டயாலிசிஸ் செய்து வருவதாகவும், மருந்து மாத்திரைகளுக்கெல்லாம் சேர்த்து 20,000 வரை செலவாகும் அதை என்னுடைய மனைவி தான் பார்த்துக் கொள்கிறார், மேலும் ஓய்வு பெற்ற தன்னுடைய தந்தை மாதம் 5000 கொடுத்து தனக்கு உதவி செய்கிறார் என்று சீனி ராஜா பேசியிருக்கும் வீடியோ தற்போது வைரலாகி இருக்கிறது. மேலும் அவரின் மனைவி பாரதி கூறும் பொழுது என்னுடைய நகைகள் அனைத்தும் கடனில் மூழ்கி விட்டது, இதனால் தன்னுடைய குடும்பத்தார் யாருமே இவரிடம் பேசுவதில்லை என்று பேசியிருக்கிறார். ஆனால் கவிஞர் தாமரை அந்த பெண்ணுக்கு ஆதரவாக கமெண்ட் ஒன்றை போட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி இருக்கிறது.. நீங்களும் அந்த வீடியோவை காண.. Watch the below video..

விளம்பரம்

YouTube Video Code Embed Credits: Behindwoods O2

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment