The Indian Times

நீயா நானா நிகழ்ச்சியில் கணவர் சினேகனுக்கு கவிதை கூறி வெட்கப்பட வைத்த கன்னிகா… கவிஞருக்கே கவிதையா

விஜய் தொலைக்காட்சியில் உள்ள பிரபல நிகழ்ச்சிகளில் ஒன்று நீயா நானா.இந்த நிகழ்ச்சிக்கு பெரும் ரசிகர்கள் கூட்டமே உண்டு.பல ஆண்டுகளாக இந்த நிகழ்ச்சியை தொகுப்பாளர் கோபிநாத் சிறப்பாக தொகுத்து வழங்கி வருகிறார்..இந்த நிகழ்ச்சியில் சரியானது எதுவோ அதை மட்டும் இவர் பேசுவதால் இவரை பலருக்கும் பிடிக்கிறது.இவரின் பேச்சுக்கே பல ரசிகர்கள் இவருக்கு உள்ளனர்.அந்தளவிற்கு தனது சிறப்பான விவாதத்தினால் அசத்தி வருகிறார் வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

Advertisement

வாரம்தோறும் ஞாயிற்றுக்கிழமை ஒளிபரப்பாகும் இந்த நிகழ்ச்சியில் ஒரு தலைப்பினை எடுத்து அதனை விவாதம் செய்து வருவார்கள்.இந்த நிகழ்ச்சி இன்றுவரை வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்க காரணம் அதில் விவாதிக்கும் தலைப்புகளும்,நடுநிலையாக பேசி வரும் கோபிநாத் தான் ஆகும்.தற்போது இந்த வார நிகழ்ச்சியின் ப்ரோமோவை வெளியிட்டுள்ளது. விஜய் தொலைக்காட்சி.இந்த வாரம் நிகழ்ச்சியில் இளைஞர்கள் மற்றும் கவிதை எழுதும் பெண்களை கொண்டு விவாதம் செய்யப்பட்டுள்ளது

இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கவிஞர் சினேகன் மற்றும் அவரது மனைவி கன்னிகா ஆகியோர் கலந்துகொண்டுள்ளனர்.இந்த நிகழ்ச்சியில் கன்னிகா சினேகனுக்காக ஒரு கவிதை எழுதி கொடுத்து அசத்தியுள்ளார்.இந்த ப்ரோமோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது. கன்னிகா எழுதிய கவிதை அருமையாக இருப்பதாக கூறி ரசிகர்களும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Embed video credits : VIJAY TELEVISION

Advertisement

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in