The Indian Times

சாம்பார் தரம் குறைய காரணம்..சாம்பார் செய்ய தெரியாதவன் சாம்பார் செய்யிறான்..சூப்பரா சொன்னிங்க கோபி | NEEYA NAANA

விஜய் தொலைக்காட்சியில் உள்ள பிரபல நிகழ்ச்சிகளில் ஒன்று நீயா நானா.இந்த நிகழ்ச்சிக்கு பெரும் ரசிகர்கள் கூட்டமே உண்டு.பல ஆண்டுகளாக இந்த நிகழ்ச்சியை தொகுப்பாளர் கோபிநாத் சிறப்பாக தொகுத்து வழங்கி வருகிறார்..இந்த நிகழ்ச்சியில் சரியானது எதுவோ அதை மட்டும் இவர் பேசுவதால் இவரை பலருக்கும் பிடிக்கிறது.இவரின் பேச்சுக்கே பல ரசிகர்கள் இவருக்கு உள்ளனர்.அந்தளவிற்கு தனது சிறப்பான விவாதத்தினால் அசத்தி வருகிறார் வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

வாரம்தோறும் ஞாயிற்றுக்கிழமை ஒளிபரப்பாகும் இந்த நிகழ்ச்சியில் ஒரு தலைப்பினை எடுத்து இரண்டு தரப்புகள் விவாதம் செய்யும்.இந்த வார நிகழ்ச்சியில் சைவ உணவக உரிமையாளரும்,பொதுமக்களும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டுள்ளனர்.இந்த வாரம் சைவ உணவகத்திற்கு ஏன் வரமாட்டுக்கீங்க என உரிமையாளர்கள் கேள்வி கேட்கின்றனர் அதற்கு பொதுமக்கள் தங்களது கருத்துக்களை கூறியுள்ளனர்.

இந்த ப்ரோமோவை விஜய் தொலைக்காட்சி வெளியிட்டுள்ளது.ப்ரோமோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.இந்த ப்ரோமோவில் ,இட்லி 12 ரூபாய்க்கு விற்கலாம்,அதுக்கு மேல எப்படி விற்பது என உணவாக உரிமையாளர் கூற,அதற்கு பதிலளித்த பொதுமக்கள் கொடுக்குற காசுக்கு திருப்தியாக சாப்பிட வேண்டும் என கூறுகிறார்.மாஸ்டர்கள் தற்போது ஹிந்தி காரர்களாக மாறிவிட்டனர் என கூற,கோபிநாத் அப்போ சாம்பார் தரம் குறைய காரணம் சாம்பார் செய்ய தெரியாதவன் சாம்பார் செய்யிறான் என கூறியுள்ளார்.

Embed video credits : VIJAY TELEVISION

Advertisement

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in