The Indian Times

என் பையன் என்ன ஒரு கேள்வி கேட்டான் – பேட்டியில் அழுத நடிகர் நெப்போலியன்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்தவர் நடிகர் நெப்போலியன்.இவர் வெள்ளித்திரையில் எதாவது சாதிக்க வேண்டும் என்ற நோக்கில் வாய்ப்பு தேடி அலைந்த பொழுது திரைப்படத்தில் வாய்ப்பு கிடைத்தது.அதன்படி 1991 ஆம் ஆண்டு வெளியாகிய புது நெல்லு புது நாத்து என்ற படத்தின் மூலம் சினிமாவிற்கு அறிமுகமாகியவர்.இப்படத்தினை தொடர்ந்து பல படங்களில் துணை கதாபாத்திரம் மற்றும் கதாநாயகனாக நடித்து வந்தார்.கதாநாயகன் மட்டும் இல்லாமல் வில்லனாகவும் நடித்து தமிழ் சினிமாவை அசத்திவந்தார்.இவர் வில்லனாக நடித்த எஜமான் படம் மாபெரும் வரவேற்பினை இவருக்கு சினிமாவில் பெற்றுக்கொடுத்தது. இவர் நடித்த சீவலப்பேரி பாண்டி திரைப்படம் நல்ல வரவேற்பை மக்களிடம் பெற்று 90 களில் முன்னணி நடிகராக உருவெடுத்து தமிழ் சினிமாவை வலம் வந்தார்.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

Advertisement

தற்போது நெப்போலியன் தமிழ் படங்களில் நடிப்பது குறைவாக உள்ளது.தனது முழு கவனத்தினையும் பிசினஸில் செலுத்தி வருகிறார்.இதனால் தற்போது அவர் குடும்பத்துடன் அமெரிக்காவில் குடிபெயர்ந்து விட்டார்.இன்று வரை இவருக்கு பெரும் ரசிகர்கள் கூட்டம் உள்ளது.அந்த அளவிற்கு நடிப்பினால் மக்கள் மனதினை கவர்ந்தார் நெப்போலியன்.அமெரிக்காவில் இருக்கும் இவர் படவாய்ப்பு வந்தால் கதையினை கேட்டு பிடித்திருந்தால் தமிழகத்திற்கு வந்து நடிப்பார்.அப்படி இவர் நடித்து அண்மையில் வெளியாகிய படம் ஹிப்ஹாப் தமிழா நடித்த அன்பறிவு திரைப்படம்.இவர் அமெரிக்காவில் இருந்து இன்ஸ்டாகிராமில் அடிக்கடி பதிவிடும் வீடியோ இணையத்தில் நல்ல வரவேற்பினை பெற்று வருகிறது.

Advertisement

இவர் அண்மையில் யூடியூப் சேனல் ஒன்றிற்கு பேட்டி அளித்துள்ளார்.அந்த பேட்டியில் அவர் கூறியதாவது,எனது இளைய மகன் புதுவிதமான நோயால் பாதிக்கப்பட்டுள்ளார்,அவரால் நடக்க இயலாது,அவருக்கு அமெரிக்கா பிடித்துப்போனதால் அங்கேயே தங்கிவிட்டோம்.அவருக்கு நான் அரசியலில் இருப்பது புடிக்கவில்லை,ஒரு நாள் என்னிடம் என் பையன் அப்பா மீண்டும் நாங்க தனியாகத்தான் இருக்கணுமா என கேட்டார் ,அன்றுடன் முழுமையாக அரசியல் விட்டு வெளியே வந்துவிட்டேன் என கூறி கண்கலங்கியுள்ளார்.

Embed video credits : Behindwoods O2

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in