சந்திரமுகியாக மாறிய இசைவாணி! நடிகர்களால் களைகட்டும் பிக் பாஸ் வீடு!

பரபரப்புக்கு பஞ்சமே இல்லாமல் வாரா வாரம் சூடு பிடிக்கும் இடம் தான் பிக் பாஸ் வீடு என்பதில் எவ்வித ஐயமும் இல்லை! அப்படி ஆரம்பித்து 29 நாட்கள் முடிந்த நிலையில், நாளுக்கு நாள் ஒவ்வொருவரின் சுயரூபம் வெளிப்பட தொடங்கியுள்ளது!இந்த வருடம் பிக் பாஸ் தொடங்கி ஐந்து வருடமான நிலையில் இந்த வருடம் பிக் பாஸ் போட்டியாளர்கள் மட்டுமில்லாமல் பிக் பாஸ் வீடும் அதில் விதிமுறைகளும் சற்று வினோதமாக உள்ளது என்பதே உண்மை!

சந்திரமுகியாக மாறிய இசைவாணி! நடிகர்களால் களைகட்டும் பிக் பாஸ் வீடு! 1
கடந்த வார இறுதியிலேயே நிரூப்புக்கும் அக்ஷராவுக்கும் வாக்குவாதம் பற்ற தொடங்கிய நிலையில் நேற்று நிலத்தின் ஆற்றலை குறிக்கும் நாணயத்தை நிரூப் தன்வசம் வைத்துள்ளதால் அவரது ஆளுமையால் இந்த வீடு இயங்கும் என்று அறிவித்த நிலையில் நிரூப் சில விதிகளை போட்டு தனக்கு உதவியாளராக அக்ஷராவை நியமிக்க அவரோ அதை மறுக்க மேலும் சூடு பிடிக்க தொடங்கியது!
அது மட்டுமில்லாமல் விதிமுறையை மீறுவதாக இமான் அண்ணாச்சியின் மீது பிரியங்கா உட்பட சக போட்டியாளர்கள் விளையாட்டு தனமாக போர்க்கொடி தூக்க, அது இறுதியில் சிறிது மனக்கசப்புடனே முடிந்தது!நாளுக்கு நாள் மாறி வரும் மக்கள் மனநிலையின் வெளிப்பாட்டை வெளிச்சம்போட்டு காட்டும் பிக் பாஸ் வீடு இன்னும் பல சவால்களை சந்திக்க உள்ள நிலையில் இன்றைய நாளுக்கான ப்ரோமோ வெளியாகி உள்ளது! அந்த விடியோவை நீங்களும் பார்த்து மகிழுங்கள்! Watch the Video Below….

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment