Double Eviction – ஷாரிக், அபிநய் Out.. ஓவியா In..வெளியான புது தகவல் | BiggBoss Ultimate Wild Card Entry

பிக்பாஸ் அல்டிமேட் என்ற 24 மணி நேரம் ஒளிபரப்பு நிகழ்ச்சியானது தற்போது நடைபெற்று வருகிறது. இது டிவியில் ஒளிபரப்பபடுவதில்லை மாறாக பிக் பாஸ் தமிழுக்கான ஸ்பின்-ஆஃப் மற்றும் OTT பிளாட்ஃபார்ம் டிஸ்னி+ ஹாட் ஸ்டாரில் பிரத்யேகமாக வெளியிடப்பட்டு வெற்றிகரமாக நடைபற்று வருகிறது. இந்த நிகழ்ச்சியானது 30 ஜனவரி 2022 அன்று ஸ்டார் இந்தியாவின் ஸ்ட்ரீமிங் சேவையான டிஸ்னி+ ஹாட் ஸ்டாரில் வெளியிடப்பட்டது . அதன் பிரமாண்டமான வெளியீட்டு விழா ஜனவரி 30 ஆம் தேதி ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டது. அதன் தினசரி ஹைலைட் செய்யப்பட்ட கிளிப்புகள் 3 மணிநேர எபிசோடாக வாரம்தோறும் ஞாயிறு விஜய் டிவியில் ஒளிபரப்பப்பாகிறது.

Double Eviction - ஷாரிக், அபிநய் Out.. ஓவியா In..வெளியான புது தகவல் | BiggBoss Ultimate Wild Card Entry 1

விளம்பரம்

புதிதாக தொடங்கப்பட்டுள்ள பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சிக்கு கலந்து கொண்டுள்ள போட்டியாளர்கள் சினேகன், ஜூலி, வனிதா, சுரேஷ் சக்கரவர்த்தி, அபிராமி வெங்கடாச்சலம், தாடி பாலாஜி, அனிதா சம்பத், ஷாரிக், நிரூப், தாமரை, சுஜா வருணி, ஸ்ருதி மற்றும் அபினய் என 14 போட்டியாளர்கள் பங்கேற்று உள்ளனர். முதல் வாரத்தில் சுரேஷ் சக்கரவர்த்தியும், இரண்டாவது வாரத்தில் சுஜா வருணியும் வெளியேற்றப்பட்டுள்ளனர். மிகவும் எதிர் பார்க்கப்பட ஓவியா மற்றும் பரணி கலந்து கொள்ளவில்லை இவர்கள் இருவரும் Wild Card என்ட்ரியாக கலந்து கொள்வார்கள் என்று அதிகாரபூர்வமற்ற தகவல்கள் வந்து கொண்டு இருக்கிறது. இது வழக்கமான பிக்பாஸ் போல் 100 நாட்கள் இல்லாமல் 70 நாட்கள் மட்டுமே நடைபெறும் என்று கூறப்படுகிறது. இந்த அல்டிமேட் நிகழ்ச்சியையும் கமலஹாசனே தொகுத்து வழங்கி வருகிறார்.  Youtube Video embed code credits: Galatta Tamil

Oviya

விளம்பரம்

தற்போது கிடைத்துள்ள தகவல்படி இந்த வாரம் இரண்டு பேர் வெளியேற்றப்பட்டு (Double Eviction) புதிதாக wild card எண்ட்ரியாக ஓவியா உள்ளே அனுப்பப்படலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இது எந்த அளவிற்கு உண்மை என்பது தெரியவில்லை. நேற்றே பிக்பாஸ் Double Evictionக்கு தயாராக இருங்கள் என்று கூறி இருந்தார். அதன்படி ஷாரிக், அபிநய் ஆகிய இருவரும் இந்த வாரம் வெளியேற்றப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அந்த வீடியோவை நீங்களும் காண.. Watch the below video…

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment