The Indian Times

கண்ணனுக்காக சிறைக்கு சென்ற கதிர்… காப்பாற்ற போராடும் மூர்த்தி… பாண்டியன் ஸ்டோர் ப்ரோமோ

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிரபல சீரியல்களில் ஒன்று பாண்டியன் ஸ்டோர்.விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் அனைத்து சீரியல்களும் ஹிட் சீரியல்கள் தான் அந்த வரிசையில் தற்போது பாண்டியன் ஸ்டோர் சீரியல் பல ஆண்டுகளாக விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ரசிகர்களிடம் ஏகோபித்த வரவேற்புகளை பெற்றுள்ளது. அண்ணன் தம்பிகள் வாழ்க்கையை மையமாக கொண்டு கதையை இயக்கியுள்ளதால் இந்த தொடருக்கு பெரும் ரசிகர்கள் கூட்டம் உள்ளது, வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

Advertisement

தற்போது தொடரில் அண்ணன் தம்பிகளுக்கு இடையே ஏற்பட்ட மனக்கசப்பு காரணத்தினால் ஜீவா தனது மனைவியுடனும் கண்ணன் தனது மனைவியுடனும் வீட்டை விட்டு வெளியேறியுள்ளார்.தம்பியின் பிரிவினை தாங்க முடியாமல் தவிக்கிறார் மூர்த்தி.இவ்வாறு நாடகம் சூடுபிடித்து சென்று கொண்டிருக்கிறது.ரசிகர்களும் சோகத்துடன் சீரியலை கண்டும் மேலும் எப்பொழுது பாண்டியன் ஸ்டோர் குடும்பம் பழைய மாதிரி மாறும் என ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

கண்ணன் வாங்கிய கடனை செலுத்தாததால் வங்கியில் உள்ளவர்கள் அவரை வீடு புகுந்து அசிங்கப்படுத்தி அவமான படுத்தி அடித்துவிடுகின்றனர்.இதனால் கடுப்பாகிய கதிர் அவர்களை தேடி சென்று அடிக்கிறார்,அவர்கள் போலீசில் புகார்கொடுக்கவே கதிரை கைது செய்ய போலீஸ் வருகிறது.இந்த வார புதிய ப்ரோமோ வெளியாகியுள்ளது,ப்ரோமோவில் கதிரை காண மூர்த்தியும் ஜீவாவும் போலீஸ் ஸ்டேஷன் வருகின்றனர்,மேலும் கதிரை காப்பாற்ற முயற்சியும் செய்து வருகின்றனர்.

Embed video credits : vijay television

Advertisement

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in