The Indian Times

எனக்கு ஐஸ்வர்யா தான் முக்கியம்… வீட்டை விட்டு வெளியேறிய கண்ணன்… கலங்கிய பாண்டியன் ஸ்டோர் குடும்பம்

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிரபல சீரியல்களில் ஒன்று பாண்டியன் ஸ்டோர்.விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் அனைத்து சீரியல்களும் ஹிட் சீரியல்கள் தான் அந்த வரிசையில் தற்போது பாண்டியன் ஸ்டோர் சீரியல் பல ஆண்டுகளாக விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ரசிகர்களிடம் ஏகோபித்த வரவேற்புகளை பெற்றுள்ளது. அண்ணன் தம்பிகள் வாழ்க்கையை மையமாக கொண்டு கதையை இயக்கியுள்ளதால் இந்த தொடருக்கு பெரும் ரசிகர்கள் கூட்டம் உள்ளது, வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

Advertisement

இந்நிலையில் தற்போது திருமணத்தில் கலந்துகொள்ளும் பாண்டியன் ஸ்டோர் குடும்பம்.ஜீவா எல்லாரும் சேர்த்து மொய் அண்ணன் வைத்துவிடுவார் என எண்ணவே,ஆனால் அனைவரும் தனி தனியாக மொய் வைத்துள்ளனர்.இதனால் திருமண மொய் பட்டியலில் ஜீவா பெயர் இல்லாததால் கடுப்பாகிய ஜீவா,இனி நான் உனக்கு தம்பியே இல்லை,என்ன அசிங்கப்படுத்திக்கிட்டே இருக்கே,இனி நான் வீட்டுக்கு வரமாட்டேன் என கூறி சண்டையிட்டு செல்கிறார்.இதனால் கடுப்பாகிய மூர்த்தி பிரச்சனைக்கு காரணமான கண்ணனை கன்னத்தில் அறைகிறார்.இதனை கண்டித்து கண்ணன் மனைவி ஐஸ்வர்யா சண்டையிடுகிறார்.

சண்டையிட்ட ஐஸ்வர்யா வீட்டை விட்டு வெளியே செல்கிறார்.அவரை சமாதானம் செய்ய அனைவரும் முயற்சிக்கின்றனர்,மேலும் கண்ணனிடம் ஐஸ்வர்யா நான் வேணுமா இல்லை உன் குடும்பம் வேணுமா என கேள்வி எழுப்புகிறார்.இறுதியாக கண்ணன் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டு எனக்கு ஐஸ்வர்யா தான் முக்கியம் என கூறி வீட்டை விட்டு வெளியேறுகிறார்.இது பெரும் சோகத்தினை ரசிகர்களிடம் ஏற்படுத்தியுள்ளது.

https://www.youtube.com/watch?v=nUkXy0DiVZU

Embed video credits : VIJAY TELEVISION

Advertisement

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in