The Indian Times

மீண்டும் ஒன்று சேர்ந்த அண்ணன் தம்பிகள்.. ஆட்டம் பாட்டத்துடன் முல்லை வளைகாப்பை கொண்டாடிய பாண்டியன் ஸ்டோர்

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிரபல சீரியல்களில் ஒன்று பாண்டியன் ஸ்டோர்.விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் அனைத்து சீரியல்களும் ஹிட் சீரியல்கள் தான் அந்த வரிசையில் தற்போது பாண்டியன் ஸ்டோர் சீரியல் பல ஆண்டுகளாக விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ரசிகர்களிடம் ஏகோபித்த வரவேற்புகளை பெற்றுள்ளது. அண்ணன் தம்பிகள் வாழ்க்கையை மையமாக கொண்டு கதையை இயக்கியுள்ளதால் இந்த தொடருக்கு பெரும் ரசிகர்கள் கூட்டம் உள்ளது, வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது 

Advertisement

தற்போது தொடரில் அண்ணன் தம்பிகளுக்கு இடையே ஏற்பட்ட மனக்கசப்பு காரணத்தினால் ஜீவா தனது மனைவியுடனும் கண்ணன் தனது மனைவியுடனும் வீட்டை விட்டு வெளியேறியுள்ளார்.தம்பியின் பிரிவினை தாங்க முடியாமல் தவிக்கிறார் மூர்த்தி.இவ்வாறு நாடகம் சூடுபிடித்து சென்று கொண்டிருக்கிறது.ரசிகர்களும் சோகத்துடன் சீரியலை கண்டும் மேலும் எப்பொழுது பாண்டியன் ஸ்டோர் குடும்பம் பழைய மாதிரி மாறும் என ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

தற்போது வெளியாகிய ப்ரோமோ ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளது என்றே கூறலாம்.முல்லை வளைகாப்பிற்கு பிரிந்து சென்ற ஜீவா மற்றும் கண்ணனும் வருகை தருகிறார்கள்,மேலும் மீண்டும் அனைவரும் ஒன்றிணைந்து ஆட்டம் பாட்டத்துடன் முலை வளைகாப்பை கொண்டாடுகின்றனர்.இந்த ப்ரோமோ ரசிகர்களிடம் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது மேலும் இதுமட்டும் கனவாக இருந்துவிட கூடாது என ரசிகர்கள் வேண்டி கமென்ட் செய்து வருகின்றனர்.

Embed video credits : VIJAY TELEVISION

Advertisement

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in