The Indian Times

மாமனாரால் தொடர்ந்து அவமானப்படுத்தப்படும் ஜீவா… பாண்டியன் ஸ்டோர்

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிரபல சீரியல்களில் ஒன்று பாண்டியன் ஸ்டோர்.விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் அனைத்து சீரியல்களும் ஹிட் சீரியல்கள் தான் அந்த வரிசையில் தற்போது பாண்டியன் ஸ்டோர் சீரியல் பல ஆண்டுகளாக விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ரசிகர்களிடம் ஏகோபித்த வரவேற்புகளை பெற்றுள்ளது. அண்ணன் தம்பிகள் வாழ்க்கையை மையமாக கொண்டு கதையை இயக்கியுள்ளதால் இந்த தொடருக்கு பெரும் ரசிகர்கள் கூட்டம் உள்ளது, வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

Advertisement

தற்போது தொடரில் அண்ணன் தம்பிகளுக்கு இடையே ஏற்பட்ட மனக்கசப்பு காரணத்தினால் ஜீவா தனது மனைவியுடனும் கண்ணன் தனது மனைவியுடனும் வீட்டை விட்டு வெளியேறியுள்ளார்.தம்பியின் பிரிவினை தாங்க முடியாமல் தவிக்கிறார் மூர்த்தி.இவ்வாறு நாடகம் சூடுபிடித்து சென்று கொண்டிருக்கிறது.ரசிகர்களும் சோகத்துடன் சீரியலை கண்டும் மேலும் எப்பொழுது பாண்டியன் ஸ்டோர் குடும்பம் பழைய மாதிரி மாறும் என ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

இந்நிலையில் குடும்பத்தை பிரிந்து மாமனார் வீட்டில் இருக்கும் ஜீவாவிடம் தனது சொத்துக்கள் மொத்தத்தையும் கொடுக்கிறார்.இதனால் மாமா நல்லவர் என ஜீவா நினைக்கவே,தற்போது என்னை கேட்டு எந்த முடிவு வேண்டுமென்றாலும் எடுங்க என கூறி தொடர்ந்து ஜீவா எடுக்கும் முடிவுகளை தப்பு என கூறி அவமானப்படுத்துகிறார்.இதனால் ஜீவா செம்ம கடுப்பாகிறார்.இந்த ப்ரோமோவை பார்த்த ரசிகர்கள் இதுக்குதான் வீட்டை விட்டு வெளியே போக கூடாது என அண்ணன் சொல்கிறார் என கூறுகிறார்.

Embed video credits : VIJAY TELEVISION

Advertisement

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in