The Indian Times

நீ பிறக்கும் போது அப்பா உன் கூட இல்லாம போயிட்டனே.. தன் மகளை கைகளில் வாங்கி அழும் கண்ணன்.. பாண்டியன் ஸ்டோர் ப்ரோமோ

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிரபல சீரியல்களில் ஒன்று பாண்டியன் ஸ்டோர்.விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் அனைத்து சீரியல்களும் ஹிட் சீரியல்கள் தான் அந்த வரிசையில் தற்போது பாண்டியன் ஸ்டோர் சீரியல் பல ஆண்டுகளாக விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ரசிகர்களிடம் ஏகோபித்த வரவேற்புகளை பெற்றுள்ளது. அண்ணன் தம்பிகள் வாழ்க்கையை மையமாக கொண்டு கதையை இயக்கியுள்ளதால் இந்த தொடருக்கு பெரும் ரசிகர்கள் கூட்டம் உள்ளது, வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கண்ணன் லஞ்சம் வாங்கியதாக கூறி அவரை மேலதிகாரி சூழ்ச்சியால் கைது செய்கின்றனர்.இந்த செய்தி டிவியில் ஒளிபரப்பாகவே அதனை கண்டு பாண்டியன் ஸ்டோர் குடும்பமே துடிதுடிக்கின்றது.மேலும் மூர்த்தி கண்ணன் லஞ்சம் வாங்கியதாகவும் நம்பி செம்ம கடுப்பாகியுள்ளார்,அதே சமயம் ஜீவா ஒரு பக்கம் கண்ணனை போலீசில் இருந்து வெளியே எடுக்க கஷ்டப்பட்டு வருகிறார்.

இந்த வார ப்ரோமோ வெளியாகியுள்ளது,ப்ரோமோவில் கண்ணன் ஜெயிலில் இருந்து வருகிறார்,அண்ணன் மூர்த்தி காலில் விழுந்து தப்பு செய்யவில்லை என அழவே மூர்த்தி அதை நம்பாமல் அங்கிருந்து கிளம்புகிறார்,மேலும் தனது குழந்தையை கைகளில் முதல் முறையாக வாங்குகிறார் கண்ணன்,நீ பிறக்கும் போது அப்பா உன் கூட இல்லாம போயிட்டனே என கதறி அழுது பார்ப்பவர்களையும் அழவைக்கிறார் கண்ணன்.இந்த ப்ரோமோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.

Embed Video Credits : VIJAY TELEVISION

Advertisement

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in