The Indian Times

நானே வருவேன் படத்தினை நான் ஏன் கலாய்க்கனும்… பார்த்திபன் அதிரடி பேட்டி

நடிகர் மற்றும் இயக்குனர் என தமிழ் சினிமாவில் பல திறமைகளை உள்ளடக்கியவர் பார்த்திபன்.இவர் நடிகராகவும் இயக்குனராகவும் சினிமா உலகில் சாதித்து வருகிறார்.அண்மையில் இவர் இயக்கி நடித்த ஒத்த செருப்பு படத்திற்கு தேசிய விருது கிடைத்தது.இது இவரது ரசிகர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை தந்தது.இந்த தேசிய விருது அளித்த உத்வேகத்தில் மீண்டும் அதேபோல் புதிய படத்தினை வித்தியாசமான முறையில் இயக்கியுள்ளார். மீண்டும் இவர் கதை எழுதி ஒரே ஷாட்டில் இரவின் நிழல் என்ற புதிய படத்தினை இயக்கியுள்ளார். இப்படத்திற்கு ஆசிய புக் ஆப் ரெகார்டஸ் மற்றும் இந்தியன் புக் ஆப் ரெக்கார்டஸ் கிடைத்துள்ளது.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

Advertisement

இவருடன் வரலட்சுமி சரத்குமார்,ரோபோ சங்கர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.இப்படத்திற்கு ஏ ஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார்..இப்படத்தின் முதல் பாடல் வெளியீடு விழாவில் ஏ ஆர் ரஹ்மான் உடன் பேசிக்கொண்டிருக்கும் பொழுது திடீரென மைக்கை தூக்கி பார்த்திபன் எறிந்தது இணையத்தில் பெரும் வைரலாகியது.அண்மையில் இப்படம் உலகம் முழுவதும் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.

Advertisement

தற்போது சிறிய பழுவேட்டரையராக பார்த்திபன் பொன்னியின் செல்வன் படத்தில் நடித்துள்ளார்.இப்படம் இன்று உலகம் முழுவதும் வெளியாகியுள்ளது.இன்று இப்படத்தினை பார்த்திபன் தஞ்சையில் சென்று கண்டுள்ளார்.அப்பொழுது அங்கு செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது,நேற்று ஒரு பிரஸ்மீட்டில் நானே வருவேன் என அழுத்தி கூறினேன் உடனே அதனை கலாய்த்து விட்டதாக கூறிவிவிட்டார்கள்,எனக்கு எல்லா சினிமாவும் புடிக்கும் என கூறியுள்ளார்

Embed video credits :  LITTLE TALKS

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in