பட்டத்து அரசன் வெற்றி மகுடம் சூடினானா? – திரை விமர்சனம் (?/5)

பானா காத்தாடி படத்தின் மூலம் சினிமாவுக்கு அறிமுகம் ஆகியவர் அதர்வா முரளி. முதல் படத்திலேயே பெரும் வரவேற்பினை பெற்றார்.இப்படத்தினை தொடர்ந்து பல நல்ல படங்களை ரசிகர்களுக்கு கொடுத்த இவருக்கு அண்மையில் இவர் நடித்த படங்கள் இவருக்கு சரியான வெற்றியை பெற்றுத்தரவில்லை.இதனால் இவர் தற்போது படங்களை தேர்ந்தெடுப்பதில் அதிக கவனம் செலுத்திவருகிறார். அதர்வா இரண்டாவது முறையாக இயக்குனர் சற்குணத்துடன் கைகோர்த்து பட்டத்து அரசன் படத்தில் நடித்துள்ளார்.இப்படத்தில் இவருக்கு ஜோடியாக ஆஷிகா ரங்கநாத் நடித்துள்ளார்.இவர்களுடன் ஆர் கே சுரேஷ்,ராதிகா சரத்குமார்,ராஜ்கிரண் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.லைகா நிறுவனம் இப்படத்தினை தயாரித்துள்ளது.ஜிப்ரான் இசையமைத்துள்ளார்.இப்படம் அதர்வாக்கு வெற்றியை கொடுத்ததா என்பதை விமர்சனத்தில் காண்போம்.

பட்டத்து அரசன் வெற்றி மகுடம் சூடினானா? - திரை விமர்சனம் (?/5) 1

விளம்பரம்

படத்தின் கதை :

சிறந்த கபடி ஆட்டக்காரர் ஆக வருபவர் ராஜ்கிரண்.இப்படத்தில் இவரது பெயர் பொத்தாரி.இவருக்கு இரண்டு மனைவிகள் இதில் முதல் மனைவியின் மகன் இறந்துவிடுகிறார்.அவரின் மனைவி தான் ராதிகா மகன் அதர்வா ஆவார்.இவர்களை ராஜ்கிரணின் இரண்டாவது குடும்பம் ஏற்க மறுக்கவே இருவரும் தனியாக வாழ்ந்து வருகின்றனர்.அதர்வா இரண்டு குடும்பத்தினையும் ஒன்று சேர்க்க அதிகம் போராடி வருகிறார்.அவரது போராட்டங்கள் தொடர்ந்து தோல்வியை தான் சந்தித்து வருகிறது.கபடி போட்டியில் இதுவரை தோற்கடிக்காத அரசகுலம் ஊரை ராஜ்கிரண் தோற்கடித்து விடுவதால் அவருக்கு மரியாதை அதிகமாகி விடுகிறது.இது ஊர் ப்ரெசிடெண்ட்க்கு பிடிக்கவில்லை.இந்த சமயம் பொத்தாரி பேரன் செல்லையாவிற்கு ப்ரோ கபடி போட்டியில் கலந்துகொள்ள வாய்ப்பு கிடைக்கிறது.இது ப்ரெசிடெண்ட் மகன் சடகோபனுக்கு பிடிக்காமல் போகவே சதி திட்டம் தீட்டி பொத்தாரி குடும்பத்தினை ஊரை விட்டு ஒதுக்கி வைக்கிறார்கள்.ப்ரோ கபாடியில் விளையாடும் வாய்ப்பும் செல்லையாவை விட்டு போகிறது.இதனால் செல்லையா தற்கொலை செய்துகொள்கிறார்.தம்பி நல்லவன் என்று நிரூபிக்க குடும்பமே கபடி போட்டியில் விளையாடி வெற்றிபெறும் என அதர்வா சவால் விடுகிறார்.கபடி விளையாட தெரியாத அதர்வா போட்டியில் வெற்றிபெற்றாரா? குடும்பத்துடன் மீண்டும் சேர்ந்தாரா,வில்லன்களை என்ன செய்தார் என்பதே படத்தின் மீதி கதை

விளம்பரம்
கட்டாயம் படிக்கவும்  சேலையில் தேவதையாகவே மாறிய குக் வித் கோமாளி சிவாங்கி

பட்டத்து அரசன் வெற்றி மகுடம் சூடினானா? - திரை விமர்சனம் (?/5) 2

படத்தின் விமர்சனம் :

விளம்பரம்

அதிரடி கிராமத்து பையனாக களம் இறங்கி அதர்வா அசத்தி எடுக்கிறார்.பஞ்ச் வசனங்களை பறக்கவிட்டுள்ளார் அதர்வா. ராஜ்கிரண் தனது அனுபவ நடிப்பினை சிறப்பாக காண்பித்துள்ளார்.இது கபடி படம் என்று நம்பி போய் உட்கார்ந்தால் குடும்ப படமாக மாற்றிவிட்டனர்.எத்தனை முறை அடித்து விரட்டினாலும் சொந்தம் வேண்டும் என்று நிற்கும் அதர்வா பாசம் நம்மளை பாராட்ட வைக்கிறது.இருப்பினும் சில பாச காட்சிகளை நீக்கி இருக்கலாம் என தோன்றுகிறது.பெயருக்கு கதாநாயகியாக படத்தில் வருகிறார் ஆஷிகா ரங்கநாத்,படத்தின் முதல் பாதிலேயே ஆக்ஷன்,எமோஷன் என எல்லாவற்றையும் வைத்து படம் பார்ப்பவர்களை களைப்பாக ஆக்கிவிடுகிறார் இயக்குனர்.ஜிப்ரான் பாடல் எடுபடவில்லை ஆனால் இன்டெர்வல் காட்சியில் வரும் பின்னணி இசை பட்டையை கிளப்புகிறது.மொத்தத்தில் செண்டிமெண்ட் காட்சிகளை எடுத்துவிட்டு ஆக்ஷன் காட்சிகள் கூடுதலாக வைத்திருந்தால் படம் நன்றாக இருந்திருக்கும்.சரியான திரைக்கதை அமையாதது தான் படத்திற்கு பெரும் பின்னடைவை கொடுத்துள்ளது.

கட்டாயம் படிக்கவும்  மாடித்தோட்டம் வைத்து விவசாயம் செய்யும் நடிகை சீதாவின் புகைப்படங்கள் இதோ

பட்டத்து அரசன் படத்திற்கு தி இந்தியன் டைம்ஸ் வழங்கும் ரேட்டிங் – 2/5

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment