ரொம்ப Thanks அமீர்..உனக்கு எப்படி நன்றி சொல்றதுன்னே தெரில.. லைவ்வில் சொன்ன பாவனி

விஜய் டிவியில் குக் வித் கோமாளி பிரபலம் அஸ்வின் உடன் இரட்டை வால் குருவி என்ற சீரியல் மூலம் அறிமுகமானவர் தான் பாவனி. பிறகு இவர் சின்னதம்பி என்ற சீரியலில் நடிகர் ப்ரஜின் உடன் இணைந்து நடித்து பல மக்களின் அன்பை பெற்றார். இவர் சினிமாவிலும் பணிபுரிய ஆசைப்பட்டு அதற்கு முயற்சி செய்யும் பொழுதே பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்குபெற இவருக்கு வாய்ப்புகள் வந்ததாக சொல்லப்படுகிறது. இது மட்டுமில்லாமல் சீரியலில் இவர் நடித்தபோதிலும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றார் என்பதும் அனைவருக்கும் தெரிந்ததே.

ரொம்ப Thanks அமீர்..உனக்கு எப்படி நன்றி சொல்றதுன்னே தெரில.. லைவ்வில் சொன்ன பாவனி 1

விளம்பரம்

தெலுங்கை தாய் மொழியாக கொண்ட பாவனி தமிழ் மட்டும் இன்றி தெலுங்கு மொழிகளில் அதிக சீரியல்களில் நடித்தவர். பிறகு வாய்ப்புகள் குறைந்த நிலையில் பிக்பாஸ் சீசன் 5 ல் கலந்து கொண்டார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் இவர் ஒரு கடுமையான போட்டியாளர் என்றே கூறலாம். இவருடன் நட்பு பாராட்டிய ஒவ்வொரு போட்டியாளரும் வீட்டை விட்டு வெளியேறினாலும் பலரின் ஆதரவோடு பிக்பாஸ் வீட்டில் வலம் வந்தார். இவரிடம் வைல்ட் கார்டு என்ட்ரியாக வந்த டான்ஸ் மாஸ்டர் அமீர் காதலிப்பது போன்ற விளையாட்டை நடத்தினார். Youtube Video Embed Code Credits: IndiaGlitz

ரொம்ப Thanks அமீர்..உனக்கு எப்படி நன்றி சொல்றதுன்னே தெரில.. லைவ்வில் சொன்ன பாவனி 2

விளம்பரம்

ஆனால் பாவனி தரப்பிலிருந்து எந்த பதிலும் வரவில்லை. நாங்கள் இருவரும் நண்பர்கள்தான் என்ற பதிலுடன் முடித்து கொண்டனர். பிக்பாஸ் முடிந்து தற்போது வரை அவர்கள் நல்ல நண்பர்களாகவே உள்ளனர். இன்று இன்ஸ்டாகிராமில் கேள்வி பதில் வீடியோவில் அமீர் பற்றி பாவனியிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அப்போது பாவனி அமீர் எனக்காக எல்லா இடத்திலும் நின்றுள்ளார், அவருக்கு எப்படி நன்றி சொல்வது என்றே தெரியவில்லை என்று கூறினார். அந்த வீடியோவை நீங்களும் காண..Watch the below video..

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment