The Indian Times

பாவ்னி-க்கு நண்பர்கள் கொடுத்த சர்ப்ரைஸ்…உணர்ச்சியில் கண்ணீர் விட்ட பாவ்னி..

விஜய் டிவியில் ஒளிபரப்பான “சின்ன தம்பி” சீரியல் மூலம் பிரபலம் ஆனவர் பாவனி ரெட்டி. அதற்கு முன்பே விஜய் டிவியில் ஒளிபரப்பான “ரெட்டைவால் குருவி” என்ற சீரியலில் குக் வித் கோமாளி அஸ்வின் உடன் இணைந்து நடித்து இருந்தார். அனால் அப்போது இவர்கள் இருவருமே பிரபலம் ஆகவில்லை. இவர் பிக் பாஸ் சீசன் 5ல் போட்டியாளராக கலந்துகொண்டு 2ம் ரன்னர் அப் ஆக வந்தார். பிக் பாஸ் மூலமாக அவருக்கு ஆர்மி எல்லாம் கிடைத்து இருக்கிறது. இவருக்கு மக்களின் ஆதரவு சற்று அதிகம் இருந்தது. அதனால் தான் போட்டி கடுமையாக இருந்த போதிலும் இவரால் தாக்கு பிடிக்க முடிந்தது.

Advertisement

ஆரம்பத்தில் தாமரை உடன் சண்டை, மொழி பிரச்சினை என்று இவர் மேல அதிகம் விமர்சனம் வைக்கப்பட்டாலும், மக்களால் ஒவ்வொரு முறையும் காப்பாற்றப்பட்டு இறுதி வரை வந்தார். ஆனாலும் ராஜு மற்றும் பிரியங்காவை விட அதிகம் வாக்குகள் அவரால் பெற முடியவில்லை. இந்நிலையில் பாவனி ரெட்டி தான் இனி சினிமாவில் மட்டும் நடிக்க போவதாகவும், சீரியல்களில் நடிக்கும் எண்ணம் இல்லை எனவும் தெரிவித்து இருக்கிறார். பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் இவரின் பேட்டிகள் பிரபலம் ஆகி வருகின்றன. குறிப்பாக அமீருடன் இவர் இணைத்து கொடுக்கும் பேட்டிகள் வைரலாகி வருகின்றன.

Advertisement

இந்த நிலையில் பிக்பாஸ் முடித்து வந்துள்ள பாவ்னிக்கு அவரது நண்பர்கள் சேர்ந்து ஒரு பார்ட்டி ஏற்பாடு செய்துள்ளனர். அதில் கேக் வெட்டியும், பாட்டு பாடியும், நடனம் ஆடியும் பாவ்னி மிகுந்த சந்தோசமாக காணப்படுகிறார். அந்த அழகான வீடியோவை நீங்களும் காண.. Watch the below Video..

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in