பழம்பெரும் நடிகர் சிவாஜிகணேசன்,அவரது மகன் பிரபு,பிரபுவின் மகன் விக்ரம் பிரபு என மிகப்பெரிய சினிமா குடும்பத்தில் இருந்து மூன்றாவது தலைமுறையாக சினிமாவிற்கு வந்தவர் விக்ரம் பிரபு.இயக்குனர் பிரபு சாலமன் இயக்கத்தில் வெளியாகிய கும்கி படத்தின் மூலம் சினிமாவிற்கு அறிமுகம் ஆகியவர் விக்ரம் பிரபு.முதல் படமே மாபெரும் வெற்றியை இவருக்கு பெற்றுத்தந்தது.இப்படத்தினை தொடர்ந்து பிரபலமாகிய இவருக்கு தொடர்ந்து படவாய்ப்புகள் வர தொடங்கியது.அடுத்தடுத்து நல்ல படங்களை மக்களுக்கு கொடுக்க தொடங்கினார்.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது
இடையில் சில படங்கள் இவருக்கு தோல்வியை கொடுத்தாலும்,அதை பற்றி கவலையில்லாமல் மீண்டும் வெற்றிகாக போராடி வருகிறார்.அண்மையில் அறிமுக இயக்குனர் தமிழ் இயக்கத்தில் இவர் நடித்த டாணாக்காரன் படம் ஹாட் ஸ்டார் ஓடிடியில் வெளியாகி மாபெரும் வரவேற்பினை பெற்றது.இப்படத்தின் மூலம் மீண்டும் தமிழ் சினிமாவில் சிறந்த நடிகராக வந்துள்ளார்.இப்படம் இவரது சினிமா வாழ்க்கையில் கும்கி படத்திற்கு பிறகு நல்ல வரவேற்பினை ரசிகர்களிடம் பெற்றுள்ளது என்று கூறினால் மிகையாகாது.
தற்போது நடிகர் விக்ரம் பிரபு இயக்குனர் கார்த்திக் இயக்கத்தில் பாயும் ஒளி நீ எனக்கு என்ற படத்தில் நடித்துள்ளார்.இப்படத்தில் இவருக்கு ஜோடியாக வாணிபோஜன் நடித்துள்ளார்.சாகர் இசையமைத்துள்ளார். தற்போது இப்படத்தின் ட்ரைலர் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.
Embed video credits : DIVO MUSIC
Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in