The Indian Times

சொந்த கிராமத்தில் பொங்கலை கொண்டாடிய கவிஞர் சினேகன்

தமிழ் சினிமாவிற்கு பல நல்லபாட்டுகளை தந்தவர் சினேகன்.இவர் எழுதிய வரிகள் அனைத்திற்கும் உயிர் உள்ளது போல் தோன்றும் இவர் எழுதிய பாடல்களை கேட்கும் பொழுது.

இவர் முதல் முறையாக எழுதிய பாடல் பரத்வாஜ் இசையமைத்த பாண்டவர் பூமி படத்தில் உள்ள அவரவர் வாழ்க்கையில் ஆயிரம் ஆயிரம் மாற்றங்கள் மற்றும் தோழா தோழா என்ற பாடல் தான்.இந்த பாடல் மக்களிடம் பெரும் வரவேற்பினை பெற்றது.

Advertisement

இந்த பாடல்களை தொடர்ந்து மக்களிடம் மிக பிரபலம் ஆனவர் ஆகினார் சினேகன்.இதனை தொடர்ந்து பல தமிழ் படங்கங்களுக்கு பாடல் எழுத தொடங்கினார்.சினேகன்.அதன்படி தாயை மதிக்கும் படி ராம் படத்தில் இவர் எழுதிய ஆராரிராரோ என்ற பாடலுக்கு இன்று வரை ரசிகர்கள் உண்டு.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசனில் சினேகனுக்கு வாய்ப்பு கிடைத்தது.அதனை பயன்படுத்தி நிகழ்ச்சியில் பங்குபெற்றார்.

பிக் பாஸ் சீசன் 1ல் போட்டியாளராக கலந்துகொண்டு மக்களிடம் பெரும் வரவேற்பினை பெற்றார்.

சினேகன் அண்மையில் தான் பல ஆண்டுகளாக காதலித்து வந்த தனது காதலி கன்னிகாவை மணமுடித்துக்கொண்டார்.இவரும் சின்னத்திரையில் நடிகர் ஆவார்.கே.பாலசந்தர் இயக்கிய அமுதா ஒரு ஆச்சரியக்குறி என்ற சீரியல் மூலம் சின்னத்திரையில் அறிமுகமாகியவர் கன்னிகா.

அதன்பின்னர் சரித்திரம் பேசு என்ற படத்தின் மூலம் சினிமாவிற்குள் நுழைந்தார். சத்ரபதி,தேவராட்டம்,அடுத்தசாட்டை என்று பல படங்களில் நடித்துள்ளார் இவர்.அண்மையில் திருமுருகன் இயக்கத்தில் கல்யாண வீடு தொடரில் கதாநாயகியாக நடித்து மக்களிடம் வரவேற்பை பெற்றார்

Advertisement

தற்போது இவர் சொந்த ஊரில் பொங்கல் பண்டிகையை கொண்டாடி புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in