வந்தியதேவன் கதாபாத்திரம் தவறாக சித்தரிப்பு – பொன்னியின் செல்வன் மீது போலீசில் புகார்

இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் பொன்னியின் செல்வன். விக்ரம்,கார்த்தி,ஜெயம் ரவி,த்ரிஷா,ஐஸ்வர்யா ராய் மற்றும் ஜெயராம் என பலரையும் நடிக்க வைத்து சோழர்களின் பிரம்மாண்ட காவியத்தினை இரண்டு பாகங்களாக உருவாக்கியுள்ளார் மணிரத்தினம்.இப்படம் கடந்த வெள்ளிக்கிழமை உலகம் முழுவதும் வெளியாகி மாபெரும் வரவேற்பினை பெற்று வருகிறது.

கட்டாயம் படிக்கவும்  ரோபோ சங்கர் மகளையும் மருமகனையும் வாழ்த்திய ராகவா லாரன்ஸ்

வந்தியதேவன் கதாபாத்திரம் தவறாக சித்தரிப்பு - பொன்னியின் செல்வன் மீது போலீசில் புகார் 1

விளம்பரம்

பல திரையரங்குகளில் ஒரு வார காட்சிகள் ஹவுஸ்புல் ஆகியுள்ளது.இப்படம் முதல் நாளிலேயே உலகம் முழுவதும் 80 கோடி ரூபாய் வசூலித்துள்ளது. இதுவரை எந்த தமிழ் படமும் செய்யாத ஒரு சாதனையை இப்படம் செய்ததாக பெருமையை பெற்றுள்ளது.நாளுக்கு நாள் படத்திற்கு வசூல் அதிகரித்து வருகிறது.மக்களும் தங்களது பேராதரவினை படத்திற்கு கொடுத்து வருகின்றனர்.இந்நிலையில் பொன்னியின் செல்வன் படம் மீது போலீசில் புகார் அளித்துள்ளனர்.

கட்டாயம் படிக்கவும்  விஷால் மிரட்டும் ரத்னம் படத்தின் First Single வெளியாகியது

வந்தியதேவன் கதாபாத்திரம் தவறாக சித்தரிப்பு - பொன்னியின் செல்வன் மீது போலீசில் புகார் 2

விளம்பரம்

அந்த புகாரில் கூறியதாவது,வந்திய தேவன் கதாபாத்திரம் தவறாக சித்தரிக்கப்பட்டுள்ளது.உண்மைக்கு புறம்பாக கதையை சித்தரித்து படம் எடுத்துள்ள மணிரத்தினம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வழக்கறிஞர் அலெக்ஸாண்டர் என்பவர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.மேலும் தஞ்சை பெரிய கோவிலில் கல்வெட்டுகளில் உள்ள சோழர்கள் வரலாறு மறைக்கப்பட்டுள்ளதாக புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment