The Indian Times

நயன்தாரா விக்னேஷ் சிவன் மீது போலீசில் பரபரப்பு புகார்…. நயன் ரசிகர்கள் அதிர்ச்சி

தமிழ் சினிமாவில் ஐயா படத்தின் மூலம் சினிமாவிற்கு அறிமுகம் ஆகியவர் நடிகை நயன்தாரா. இப்படத்தில் நல்ல வரவேற்பினை பெற்று முதல் படத்திலேயே முன்னணி நடிகையாக உருவெடுத்தார். தமிழ் சினிமாவில் இவருக்கு பெரும் ரசிகர்கள் கூட்டம் உள்ளது.தொகுப்பாளராக தான் வாழ்க்கையை தொடங்கியவர் இன்று இன்று தனது கடின உழைப்பினால் லேடி சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்தினை மக்களிடம் வாங்கியுள்ளார்.தற்போது இவர் கதாநாயகியாக மட்டும் இல்லாமல் கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களிலும் நடித்து வருகிறார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

Advertisement

இவர் இயக்குனர் விக்னேஷ் சிவனை சுமார் 7 ஆண்டுகளுக்கு மேலாக காதலித்து வந்தார்.ஜூன் 9 ஆம் தேதி இயக்குனர் விக்னேஷ் சிவனை திருமணம் செய்துகொண்டார்.இந்நிலையில் விக்னேஷ் சிவன் தாங்கள் இரட்டை குழந்தைகளுக்கு அம்மா அப்பா ஆகியதாக குறிப்பிட்டுள்ளார்.இது பெரும் அதிர்ச்சியை ரசிகர்களிடம் ஏற்படுத்தியுள்ளது.நயன்தாரா விக்னேஷ் சிவன் ஜோடி வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.இவ்வாறு குழந்தை பெற்றுக்கொள்ள பல விதிமுறைகள் உள்ளது ,மேலும் குறிப்பாக வாடகை தாய் மூலம் குழந்தை பெற விரும்பும் தம்பதிகளுக்கு திருமணம் ஆகி குறைந்தது 5 ஆண்டுகள் ஆகியிருக்க வேண்டுமாம் இதுகுறித்து விசாரணை செய்ய சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் குழு ஒன்றை அமைத்துள்ளார்.

Advertisement

இந்நிலையில் வாடகை தாய் விவகாரத்தில் நடிகை நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.அரசு விதிமுறைகளை மீர் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றுள்ளனர் என குற்றம் சாட்டப்பட்டுள்ளது.இதற்கு காவல் துறை விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in