The Indian Times

பொன்னியின் செல்வன் 2 எனக்கு திருப்தியில்லை… இயக்குனர் மோகன் ஜி

பழைய வண்ணாரப்பேட்டை படத்தின் மூலம் இயக்குனராக தமிழ் சினிமாவிற்குள் அறிமுகம் ஆகியவர் மோகன்.இப்படத்தினை தொடர்ந்து இவர் இயக்கிய திரௌபதி ,ருத்ர தாண்டவம் போன்ற திரைப்படங்கள் நல்ல வரவேற்பினை ரசிகர்களிடம் பெற்றிருந்தது.

மேலும் பெரும் விமர்சனங்களும் இப்படங்களுக்கு கிளம்பியது. இப்படங்களை தொடர்ந்து மீண்டும் இயக்குனர் மோகன் ,இயக்குனர் செல்வராகவன் மற்றும் நடராஜனை வைத்து பகாசூரன் என்ற படத்தினை இயக்கி இருந்தார் இப்படமும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது 

Advertisement

Embed video credits : THI CINEMAS

இவர் இயக்கும் படங்கள் அனைத்துமே சர்ச்சையில் சிக்கும் படமாக அமைவதால் சிலர் இவர் குறித்து நெகட்டிவ் ஆக பேசி வருகின்றனர்.இருப்பினும் எதனை பற்றியும் கவலையில்லாமல் அடுத்தடுத்து தான் நினைப்பதை படத்தில் சொல்லி வருகிறார் இயக்குனர் மோகன் ஜி.

பகாசுரன் வெற்றியை தொடர்ந்து அடுத்த படத்தில் கவனம் செலுத்த தொடங்கி இருந்தார்.இந்நிலையில் அண்மையில் இவர் அளித்த பேட்டி ஒன்றில் பொன்னியின் செல்வன் 2 படம் குறித்து கேட்ட பொழுது,அப்படம் தனக்கு திருப்தி அளிக்கவில்லை என கூறியுள்ளார்,

மேலும் பார்ட் 1 தான் எனக்கு பிடித்திருந்தது,பார்ட் 2வில் பொன்னியின் செல்வன் என படத்திற்கு பெயரை வைத்துவிட்டு அதுகுறித்து ஒன்றும் காட்டவில்லை இதனால் படம் மேக்கிங் ஆக நல்லா இருக்கிறது ஆனால் கதையில் எதுவுமில்லை என கூறி விமர்சனம் செய்துள்ளார்.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in