The Indian Times

3 நாள் முடிவில் அசுரத்தனமாக வசூல் செய்துள்ள பொன்னியின் செல்வன்… அரண்டுபோன பிற மொழி சினிமா

இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் பொன்னியின் செல்வன். விக்ரம்,கார்த்தி,ஜெயம் ரவி,த்ரிஷா,ஐஸ்வர்யா ராய் மற்றும் ஜெயராம் என பலரையும் நடிக்க வைத்து சோழர்களின் பிரம்மாண்ட காவியத்தினை இரண்டு பாகங்களாக உருவாக்கியுள்ளார் மணிரத்தினம்.இப்படம் கடந்த வெள்ளிக்கிழமை உலகம் முழுவதும் வெளியாகியது.இப்படத்தினை மெட்ராஸ் டாக்கீஸ் மற்றும் லைகா நிறுவனம் தயாரித்துள்ளது.ஏஆர் ரஹ்மான் இப்படத்திற்கு பிரம்மாண்டமாக இசையமைத்துள்ளார்.

Advertisement

ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்று ஹவுஸ்புல் காட்சிகளாக ஓடிக்கொண்டு இருக்கிறது பொன்னியின் செல்வன்.காரணம் படம் தமிழர்களின் பெருமை மற்றும் வீரத்தினை உலகறிய செய்ய இருப்பதால்.பெரும் பொருட்செலவில் இப்படம் உருவாகியுள்ளது.இதனால் இதற்கு பெரும் எதிர்பார்ப்பு கிளம்பி இருக்கிறது.தமிழகத்தில் பல திரையரங்குகளில் ஒரு வாரத்திற்கான டிக்கெட்டுகள் விற்பனை ஆகியுள்ளது.

Advertisement

இப்படம் முதல் நாளில் உலகம் முழுவதும் 80 கோடி ரூபாயை வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.இதனால் தமிழ் ரசிகர்கள் பெரும் மகிழ்ச்சியுடன் உள்ளனர்,மேலும் பிறமொழி சினிமா போல தமிழ் சினிமாவிலும் ஆயிரம் கோடி வசூல் வந்துவிடும் என எதிர்பார்ப்பில் உள்ளனர்.இந்நிலையில் படம் வெளியாகி மூன்று நாட்கள் ஆகிய நிலையில் மூன்று நாள் முடிவில் இப்படம் ரூ.230 கோடியை வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.இது அதிகாரபூர்வ அறிவிப்பு இல்லையென்றாலும் விரைவில் அதிகாரபூர்வ அறிவிப்பு படக்குழு அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in