The Indian Times

மலைபோல் குவிந்த பொன்னியின் செல்வன் 7 நாள் வசூல்… நிறுவனமே அறிவித்த அதிகாரபூர்வ அறிவிப்பு

இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் பொன்னியின் செல்வன். விக்ரம்,கார்த்தி,ஜெயம் ரவி,த்ரிஷா,ஐஸ்வர்யா ராய் மற்றும் ஜெயராம் என பலரையும் நடிக்க வைத்து சோழர்களின் பிரம்மாண்ட காவியத்தினை இரண்டு பாகங்களாக உருவாக்கியுள்ளார் மணிரத்தினம்.இப்படம் நேற்று உலகம் முழுவதும் வெளியாகியது.இப்படத்தினை மெட்ராஸ் டாக்கீஸ் மற்றும் லைகா நிறுவனம் தயாரித்துள்ளது.ஏஆர் ரஹ்மான் இப்படத்திற்கு பிரம்மாண்டமாக இசையமைத்துள்ளார்.

Advertisement

ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்று ஹவுஸ்புல் காட்சிகளாக ஓடிக்கொண்டு இருக்கிறது பொன்னியின் செல்வன்.காரணம் படம் தமிழர்களின் பெருமை மற்றும் வீரத்தினை உலகறிய செய்ய இருப்பதால்.பெரும் பொருட்செலவில் இப்படம் உருவாகியுள்ளது.இதனால் இதற்கு பெரும் எதிர்பார்ப்பு கிளம்பி இருக்கிறது.தமிழகத்தில் பல திரையரங்குகளில் ஒரு வாரத்திற்கான டிக்கெட்டுகள் விற்பனை ஆகியுள்ளது.

Advertisement

தற்போது படம் வெளியாகி 7 நாட்கள் முடிந்த நிலையில் படத்தின் வசூல் விபரங்களை தயாரிப்பு நிறுவனமான லைகா நிறுவனம் வெளியிட்டுள்ளது.அதன்படி பொன்னியின் செல்வன் 7 நாட்கள் முடிவில் உலகம் முழுவதும் 300 கோடி வசூலை செய்துள்ளது.இதனால் ரசிகர்கள் பெரும் மகிழ்ச்சியில் உள்ளனர்.இப்படியே வசூல் போனால் இன்னும் 2 வாரங்களில் 1000 கோடியை தொட்டுவிடும் என ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in