The Indian Times

பொன்னியின் செல்வன் இந்த SCENE -ல இவ்வளவு பெரிய TWIST-ஆ.. இத கவனிக்கலையேப்பா

இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் பொன்னியின் செல்வன். விக்ரம்,கார்த்தி,ஜெயம் ரவி,த்ரிஷா,ஐஸ்வர்யா ராய் மற்றும் ஜெயராம் என பலரையும் நடிக்க வைத்து சோழர்களின் பிரம்மாண்ட காவியத்தினை இரண்டு பாகங்களாக உருவாக்கியுள்ளார் மணிரத்தினம்.இப்படத்தினை மெட்ராஸ் டாக்கீஸ் மற்றும் லைகா நிறுவனம் தயாரித்துள்ளது.ஏஆர் ரஹ்மான் இப்படத்திற்கு பிரம்மாண்டமாக இசையமைத்துள்ளார்.கடந்த செப்டம்பர் மாதம் 30 ஆம் தேதி வெளியாகி மாபெரும் வரவேற்பினை பெற்றுள்ளது.

Advertisement

இப்படத்தினை ரசிகர்கள் பல முறை திரையரங்கில் பார்த்து வருகின்றனர்.பல முறை பார்த்தும் சிலர் கவனிக்காத முக்கியமான திருப்பு முனை சீனை ரசிகர்கள் விளக்கி வருகின்றனர்.அதுவும் புத்தகம் படித்த ரசிகர்களுக்கு மட்டுமே தெரிந்துள்ளது இந்த நிகழ்வின் காரணம்.வந்தியத்தேவன் குந்தவையை சந்திக்க சேந்தன் அமுதன் உதவியுடன் வருவார்,படத்தில் சேந்தன் அமுதனாக அஸ்வின் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.அப்போது சேந்தன் அமுதன் குந்தவையை சந்தித்து ஒற்றன் வந்துள்ளதை கூறும் காட்சியில்,குந்தவையுடன் இருக்கும் செம்பியன் மகாதேவியை பாசமாக பார்ப்பார்.

Advertisement

கதைப்படி செம்பியன் மகாதேவியின் மகன் சேந்தன் அமுதன். அதனால் தான் அந்த காட்சியில் தனது தாயை பாசமாக பார்த்திருப்பார். தற்போது இந்த காட்சியை புத்தகம் படித்தவர்கள் இணையத்தில் விளக்கி வருகின்றனர்.மேலும் அடுத்த பகுதியில் செம்பியன் முக்கிய பங்கு வகிப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.இதனை பார்த்த ரசிகர்கள் அட இத பார்க்காம விட்டுட்டோமே என கூறி வருகின்றனர்.

Embed video credits : TIPS TAMIL

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in