The Indian Times

சோழர்களுக்கு நடிப்பு சொல்லிக்கொடுக்கும் மணிரத்தினம்.. பொன்னியின் செல்வன் MAKING புகைப்படங்கள் இதோ

தமிழ் சினிமாவில் பல நடிகர்கள் இயக்குனர்கள் இயக்க முயன்ற திரைப்படம் தான் பொன்னியின் செல்வன்.சோழர்களின் வரலாறை பறைசாற்றும் கல்கி எழுதிய நாவல் தான் இந்த பொன்னியின் செல்வன்.

நீண்ட நாள் போராட்டத்திற்கு பிறகு இப்படத்தினை பெரும் பொருட்செலவில் இயக்கியுள்ளார் இயக்குனர் மணிரத்தினம்.

Advertisement

தமிழ் சினிமாவுக்கு மிகப்பெரிய காவியத்தினை கொடுத்து பெருமை படுத்தியுள்ளார் என்று தான் கூற வேண்டும்.இப்படத்தினை இரண்டு பாகங்களாக உருவாக்கியுள்ளார் மணிரத்தினம்.

முதல் பாகம் கடந்த ஆண்டு வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது.

உலகம் முழுவதும் பல மக்களால் அதிகம் வரவேற்க்கப்பட்டது.தமிழரின் பெருமையை உலகம் முழுவதும் இப்படம் கொண்டு சென்றுள்ளது என்றே கூறலாம்.இப்படத்தினை மணிரத்தினத்தின் சொந்த தயாரிப்பு நிறுவனம் ஆன மெட்ராஸ் டாக்கீஸ் மற்றும் லைகா நிறுவனம் இணைந்து தயாரித்துள்ளது.

படத்தில் கார்த்தி,விக்ரம்,ஜெயம்ரவி ,பிரபு,ஜெயராம்,ஐஸ்வர்யா ராய்,த்ரிஷா ஆகியோர் நடித்துள்ளனர்.ஏஆர் ரஹ்மான் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.இரண்டாம் பாகம் அண்மையில் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றிருந்தது.

இப்படமும் வசூலில் சாதனை படைத்தது வருகிறது,இன்றுவரை திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது பொன்னியின் செல்வன் எனலாம்

Advertisement

தற்போது இப்படத்தின் மேக்கிங் புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ளது,இதில் மணிரத்தினம் பட்ட கஷ்டத்தினை தெரிந்துகொள்ள முடிவதாக ரசிகர்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in