The Indian Times

வெளிநாட்டில் முன்பதிவில் 10ஆயிரம் டிக்கெட்டுகள் விற்பனை…பொன்னியின் செல்வன் படைத்த சாதனை…எந்த நாட்டில் தெரியுமா?

இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் பொன்னியின் செல்வன். விக்ரம்,கார்த்தி,ஜெயம் ரவி,த்ரிஷா,ஐஸ்வர்யா ராய் மற்றும் ஜெயராம் என பலரையும் நடிக்க வைத்து சோழர்களின் பிரம்மாண்ட காவியத்தினை இரண்டு பாகங்களாக உருவாக்கியுள்ளார் மணிரத்தினம்.இப்படம் செப்டம்பர் 30 ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாக உள்ளது.இப்படத்தினை மெட்ராஸ் டாக்கீஸ் மற்றும் லைகா நிறுவனம் தயாரித்துள்ளது.ஏஆர் ரஹ்மான் இப்படத்திற்கு பிரமாண்டமாக இசையமைத்துள்ளார்.

Advertisement

தற்போது இப்படத்திற்கு ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது.காரணம் படம் தமிழர்களின் பெருமை மற்றும் வீரத்தினை உலகறிய செய்ய இருப்பதால்.பெரும் பொருட்செலவில் இப்படம் உருவாகியுள்ளது.இதனால் இதற்கு பெரும் எதிர்பார்ப்பு கிளம்பி இருக்கிறது.தமிழகத்தில் பல முன்பதிவுகள் முடிந்துள்ளது.முன்பதிவில் மட்டும் தமிழகத்தில் 5 கோடி வரை வசூல் செய்துள்ளதாக இப்படம் கூறப்படுகிறது.

Advertisement

அதுமட்டுமின்றி ஆஸ்திரேலியாவில் முன்பதிவு தொடங்கியுள்ளது.இங்கு சுமார் 10ஆயிரத்திற்கு அதிகமான டிக்கெட்டுகள் விற்பனை ஆகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.மேலும் இதுவரை எந்த படமும் செய்யாத முதல்நாள் வசூலை பொன்னியின் செல்வன் செய்யும் என ரசிகர்களால் பெருமளவு எதிர்பார்க்கப்படுகிறது.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in