The Indian Times

CHAIN அடகு வச்சு குதிரையில் பொன்னியின் செல்வன் படத்திற்காக வந்தேன்… COOL சுரேஷ்

கூல் சுரேஷ் என்று கூறினாலே முதலில் நினைவுக்கு வருவது வெந்து தணிந்தது காடு படம் தான்.இவர் தான் இப்படத்திற்கு முதலில் ப்ரோமோஷன் செய்ய தொடங்கினார்.பல மாதங்களாக இப்படத்திற்கு எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் சிம்புக்காக மட்டும் இதனை செய்து வந்தார்,இவர் 2001 ஆம் ஆண்டு சாக்லேட் என்ற படத்தில் சிறு கதாபாத்திரத்தில் நடித்து அறிமுகம் ஆகினார்.இப்படத்தினை தொடர்ந்து பல தமிழ் படங்களில் சிறு சிறு கதாபாத்திரத்தில் நடித்து வந்தார்.பல முன்னணி நடிகர்கள் படத்திலும் இவர் நடித்து விட்டார்.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

Advertisement

தமிழ் சினிமாவில்,ரவுடி,அடியாள் ,நண்பர் என எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் அதற்கு தகுந்தது போல் நடித்து பட்டையை கிளப்பும் திறமை கொண்டவர் கூல் சுரேஷ். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.வாரம் தோறும் வெள்ளிக்கிழமை படம் வெளியாகும் நாளன்று படக்குழு திரையரங்கு வருவார்களா என்பது தெரியாது ஆனால் கூல் சுரேஷ் வந்துவிடுவார்.படத்தினை பார்த்து முதல் ஆளாக வெளியே வந்து கருத்து தெரிவிப்பார்.அந்த வரிசையில் தற்போது இன்று பொன்னியின் செல்வன் படம் வெளியாகியுள்ளது

Advertisement

இப்படத்தினை இன்று சென்னையில் திரையரங்கில் காண்பதற்கு காலையிலே குதிரையில் மாஸ் ஆக வந்துள்ளார்.மேலும் ஆர் அளித்த பேட்டியில் கூறியதாவது,படத்தில் விக்ரம் பயன்படுத்திய குதிரை இது,எனது செயினை அடகு வைத்து இந்த படத்தின் ப்ரோமோஷனுக்காக அந்த குதிரையை தேடி கண்டுபிடித்து வாங்கி வந்துள்ளேன் என கூறியுள்ளார்.ரசிகர்கள் கூல் சுரேஷுக்கு பெரும் வரவேற்பினை கொடுத்துள்ளனர்.

Embed video credits : Galatta Tamil

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in