தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர் மணிரத்தினம். இவர் இயக்கத்திற்கு பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது.தமிழில் பல வெற்றிப்படங்களை இயக்கியுள்ளார்.இவரின் நீண்ட நாள் கனவு கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் கதையை படமாக எடுக்க வேண்டும் என்பதே,அதற்கான சரியான நேரம் காத்திருந்து கதையின் உரிமையை வாங்கினார்.பின்னர் படத்தினை எடுக்க துவங்கி விட்டார்.இப்படத்தில் நடிகர் ஜெயம் ரவி,கார்த்தி,விக்ரம்,பிரபு,சரத்குமார்,பார்த்திபன்,ஜெயராம்,ஐஸ்வர்யா ராய்,த்ரிஷா ஆகியோர் நடித்துள்ளனர்.இப்படத்தினை மெட்ராஸ் டாக்கீஸ் மற்றும் லைகா நிறுவனம் இணைந்து தயாரித்துள்ளது.ஏஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார்.பெரும் எதிர்பார்ப்புகளுக்குள் மத்தியில் உருவாகிய இப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. ரசிகர்கள் ஆர்வமாக படத்தினை கண்டு வருகின்றனர்
படத்தின் கதை
சோழ தேசத்து அரசர் சுந்தர சோழருக்கு மூன்று பிள்ளைகள் அதில் முதல் பிள்ளை ஆதித்த கரிகாலன்,இரண்டாவது மகள் குந்தவை மூன்றாவது கடைக்குட்டி அருண்மொழி வர்மன்.இதில் மூத்த பிள்ளை ஆதித்த கரிகாலன் தனது நண்பர்களான வல்லவரையன் வந்தியதேனுடன் இணைந்து ராஷ்ட்டிகூடர்களுக்கு எதிராக போர் புரிந்து வெற்றிகொள்கிறார்.அதே சமயம் சோழ நாட்டினை அளிக்க சதி நடப்பதை ஆதித்த கரிகாலன் தெரிந்துகொள்ள,உடனே வந்திய தேவனை தஞ்சைக்கு ஒற்றனாக அனுப்பி அங்கு நடப்பதினை தந்தைக்கும் தங்கைக்கும் எடுத்துக்கூற ஆணையிடுகிறார்.தஞ்சை செல்லும் வந்திய தேவன் அங்கு கடம்பூர் சம்புவராயர் மாளிகையை அடைகிறார்.அங்கு சுந்தர சோழருக்கு பின் மதுராந்தகன் அரசன் ஆக வேண்டும் என பெரிய பழுவேட்டயர் உடன் சிற்றரசர்கள் சதி திட்டம் தீட்டுவதை கண்டறிகிறார்.இதனை தெரிந்துகொண்டு வந்திய தேவன் அங்கிருந்து கிளம்பி பயணத்தினை தொடங்க வரும் வழியில் நந்தினியை காண்கிறார்.பின்னர் சுந்தர சோழரை சந்திக்கும் வந்திய தேவன் நடக்கும் சதி திட்டங்கள் குறித்து மன்னரிடம் கூறுகிறார்.பின்னர் குந்தவையை சந்திக்கும் வந்தியத்தேவன் காதலில் விழுகிறார்,
குந்தவையும் வந்திய தேவன் மீது காதல் வயப்படுகிறார்.இந்நிலையில் இலங்கையில் இருக்கும் தனது தம்பி அருண் மொழி வர்மனை அழைத்து வர குந்தவை வந்தியத்தேவனுக்கு கட்டளையிடுகிறார்.காதலி கட்டளையை ஏற்று பூங்குழலி படகில் இலங்கை சென்றடைகிறார் வந்தியத்தேவன் ,அருண்மொழியை சந்தித்து அனைத்தையும் கூறுகிறார்.அதே சமயம் பாண்டியனின் ஆபத்துதவிகள் ஆதித்த கரிகாலனையும், அருள் மொழி வர்மனையும், சோழ நாட்டின் அரசர் சுந்தரச்சோழரையும் கொலை செய்வதற்கு சபதம் எடுத்துக்கொள்கின்றனர்.முதலில் அருண்மொழியை கொலை செய்ய இலங்கை வரும் ஆபத்துதவிகள் அருண்மொழியை கொலை செய்தார்களா? வந்திய தேவனுக்கும் அருண்மொழிக்கும் என்ன ஆகியது?நந்தினியின் சூழ்ச்சியில் சோழ தேசம் வீழ்ந்ததா என்பதே மீதி படத்தின் கதை
படத்தின் விமர்சனம்
சிறிது நேரம் திரையில் ஆதித்த கரிகாலனாக நடிகர் விக்ரம் தோன்றி இருந்தாலும் அந்த கதாபாத்திரமாகவே வாழ்ந்துள்ளார்.அந்த கம்பீரத்தினை விக்ரமிடம் பார்க்க முடிகிறது படத்திற்கு பயங்கர வலு சேர்க்கிறது,இருப்பினும் ஆதித்த கரிகாலனை கூடுதலாக காட்டியிருக்கலாம் என்பது போல் பார்க்கும்பொழுது தோன்றுகிறது.வந்திய தேவனாக வரும் கார்த்தி ரசிகர்கள் நெஞ்சில் நீங்காத இடம் பிடித்துள்ளார் காதல் மன்னனாக கார்த்தி கலக்கியுள்ளார் படத்தில்.நந்தினியாக வரும் ஐஸ்வர்யா ராய் கண்களிலேயே நடித்து மிரட்டியுள்ளார்.வில்லி கதாபாத்திரத்திற்கு ஏற்ற வஞ்சம்,பகை எல்லாவற்றையும் அளவுக்கு அதிகமாகவே கொடுத்து தனி இடத்தினை பிடித்துவிட்டார்.அருண்மொழி வர்மன் நிதானம் தவறாமல் பாத்திரத்திற்கு ஏற்றாற்போல நடித்து அசத்தி இருக்கிறார்,குந்தவையாக த்ரிஷா நடித்து அனைவரையும் கதிகலங்க செய்துள்ளார்.அப்பேற்பட்ட கம்பீரம் த்ரிஷாவிடம்.நந்தினியின் சூழ்ச்சியில் விழும் பெரிய பழுவேட்டரையர் சரத்குமார் நடிப்பில் சிறந்து விளக்கியுள்ளார்.அதேபோல் சின்ன பழுவேட்டரையர் பார்த்திபன் அசத்தியெடுத்துள்ளார்.
மேலும் படத்தில் பார்திப்பேந்திரா பல்லவராக நடித்துள்ள விக்ரம் பிரபு, பிரபு,பிரகாஷ் ராஜ் நடிப்பில் தங்களுக்குரியதை சரியாக செய்துள்ளனர்.மணிரத்தினத்தின் இயக்கம் அனைவரையும் புல்லரிக்க செய்துவிட்டது.ஒவ்வொரு காட்சிகளையும் ரசித்து எடுத்துள்ளதை படம் பார்க்கும் பொழுது நம்மால் உணர முடிகிறது.சில இடங்களில் CG காட்சிகள் முக சுழிவை ஏற்படுத்துகிறது.படத்திற்கு ஏஆர் ரஹ்மான் இசை பெரும் கூடுதல் பலமாக அமைந்துள்ளது.பாடல்கள் பின்னணி இசை என அனைத்தும் நம்மை உள்ளம் மகிழ செய்கிறது.தோட்டா தரணியின் கலை மற்றும் vfx நம் கண்களை திரைகளில் இருந்து எடுக்க விடாமல் செய்துள்ளது.வசனங்கள் மற்றும் கேரக்டர் தேர்வுகளில் வானுயர்ந்த நிற்கின்றது பொன்னியின் செல்வன்.மேலும் நீளமான கதை என்பதால் அதை தொடுத்து கொடுத்துள்ள விதம் புத்தகம் படித்தவர்களிடம் சலிப்பை ஏற்படுத்தியுள்ளது.மற்றபடி படத்தில் குறை சொல்வதற்கு ஒன்றுமில்லை . மொத்தத்தில் பொன்னியின் செல்வன் ஒரு காவியம்
பொன்னியின் செல்வன் படத்திற்கு இந்தியன் டைம்ஸ் வழங்கும் ரேட்டிங் – 3.5 /5
Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in