The Indian Times

அஞ்சாதடா சோழா சோழா பாடலை குடத்தில் தாளமிட்டு பாடிய SINGER திருமூர்த்தி

சில வருடங்களுக்கு முன்னர் கண் பார்வை தெரியாத திருமூர்த்தி என்பவர் பாடிய பாடல் ஒன்று இணையத்தில் பெருமளவு வைரலாகியது.இதனை கண்ட இசையமைப்பாளர் இமான் அவரை கண்டுபிடித்து அவருக்கு தனது இசையில் பாடல் பாட வாய்ப்பினை வழங்கினார்.அண்மையில் ரஜினிகாந்த் நடித்த அண்ணாத்த படத்தில் குலசாமி என்ற பாடலை இவர் பாடியுள்ளார்.இப்பாடல் நல்ல வரவேற்பினை பெற்றது.இவர் நடிகர் ஜீவா நடிப்பில் வெளியாகிய சீறு படத்தில் செவ்வந்தியே என்ற பாடலை பாடி பாடகராக அறிமுகம் ஆகினார்.நன்றாக பாடியும் இவருக்கு சரியான அங்கீகாரம் கிடைக்கவில்லை என்பதே உண்மை. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

Advertisement

கமல்ஹாசனின் விக்ரம் படத்தில் இடம்பெற்ற பத்தலை பத்தலை பாடலை குடத்தில் இசையமைத்து இவர் பாடி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவேற்றியுள்ளார்.இந்த வீடியோ மிகப்பெரிய அளவு இணையத்தில் வைரலாகியது.அதனை தொடர்ந்து நடிகர் கமல்ஹாசன் திருமூர்த்தியை நேரில் அழைத்து பாராட்டி அவருக்கு இசையமைப்பாளர் ஏ ஆர் ரஹ்மான் பயிற்சி பள்ளியில் முறையாக இசை கற்பதற்கு தேவையான செலவுகளை செய்துள்ளார்.இந்த வீடியோ பெருமளவு வைரலாகி பல மக்களிடமும் சென்றடைந்தார் திருமூர்த்தி.நிச்சயம் இவருக்கு இதற்கு பின்னர் நிறைய சினிமா பாடல் பாட வாய்ப்புகள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement

இவர் கடந்த சில நாட்களாக மக்களிடம் நல்ல வரவேற்பினை பெற்ற பாடலுக்கு குடத்தில் தாளமிட்டு பாடல் பாடி அசத்தி தனது யூடியூப் பக்கத்தில் வீடியோ போட்டு வருகிறார்.இந்த வீடியோ மக்களிடம் நல்ல வரவேற்பினை பெறுவதால் தொடர்ந்து வீடியோ வெளியிட்டு வருகிறார்.தற்போது ஏஆர் ரஹ்மான் இசையில் பொன்னியின் செல்வன் படத்தில் வெளியாகிய அஞ்சாதடா சோழா சோழா பாடலை பாடியுள்ளார்.இந்த வீடியோ தற்போது இணையத்தில் ட்ரெண்ட் ஆகி வருகிறது

Embed video credits : Singer Thirumoorthy

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in