The Indian Times

பாகுபலி KGF எல்லாம் Kuppa thoti la podu! சோழர்கள் வருகிறார்கள், தமிழனாய் பெருமை கொள்வோம் பொன்னியின் செல்வன் Teaser idho

தமிழ் சினிமா கொண்டாடும் இயக்குனர்களில் ஒருவர் மணிரத்தினம்.காரணம் தரமான படங்களை தமிழ் சினிமாவுக்கு கொடுத்ததால்.மற்ற இயக்குனர்களை விட இவரது இயக்கம் வித்தியாசமாகவும் தனியாகவும் இருக்கும் என்பதால் இவரின் படத்திற்கு ரசிகர்கள் அதிகம்.சாதாரண இயக்குனர் ஆக தனது வாழ்க்கையை தொடங்கியவர் இயக்குனர் மணிரத்தினம்.தமிழில் இவர் முதன் முதலாக இயக்கிய படம் பகல் நிலவு.இப்படத்தில் நடிகர் முரளி,நடிகை ரேவதி ஆகியோர் நடித்திருந்தனர்.இப்படம் 1985 ஆம் ஆண்டு வெளியாகியது.இவருக்கு தமிழ் சினிமாவில் இயக்குனர் என்ற அந்தஸ்தினை பெற்றுக்கொடுத்த படம் என்றால் அது மோகன் வைத்து இவர் இயக்கிய மௌனராகம்.அன்று ஆரம்பித்த வெற்றி தளபதி,ரோஜா ,நாயகன்,பம்பாய் என வரிசையாக வெற்றி இவரின் வீட்டு வாசலில் நின்றது.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது 

Advertisement

மணிரத்தினத்தின் நீண்ட நாட்கள் கனவு பொன்னியின் செல்வன்.இப்படத்தினை எப்படியாவது இயக்கிவிட வேண்டும் என ஆவலுடன் இருந்தார்.இறுதியாக அதற்கான நேரமும் வந்தது.இப்படத்தினை விக்ரம்,கார்த்தி,ஜெயம் ரவி,த்ரிஷா,ஐஸ்வர்யா ராய் மற்றும் ஜெயராம் என பலரையும் நடிக்க வைத்து சோழர்களின் பிரம்மாண்ட காவியத்தினை உருவாக்கியுள்ளார் மணிரத்தினம்.இப்படத்தின் போஸ்டர்களை அண்மையில் வெளியிட்ட இவர் இன்று படத்தின் டீசரை மாலையில் வெளியிட்டுள்ளார்.டீசர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.டீசரில் நடிகர் விக்ரம் நடிப்பில் அசத்தியிருக்கிறார் அதேபோல கார்த்தி மற்றும் ஜெயம் ரவியும் தங்களது பங்கினை சிறப்பாக ஆற்றியுள்ளனர்.

Advertisement

கடந்த சில நாட்களாக தமிழில் பிற மொழி படங்கள் வெற்றிபெற்று வந்து பெரும் சோகத்தினை ஏற்படுத்தியது.இதனால் தமிழ் சினிமாவை காப்பாற்ற யாரவது வரமாட்டார்களா 1000 கோடி வசூல் தமிழிலும் வராதா என்று ரசிகர்கள் காத்துக்கொண்டிருந்த நிலையில் தற்போது சரியான நேரத்தில் படத்தினை இறக்க உள்ளார் மணிரத்தினம்.டீசரை கண்டு ரசிகர்கள் மகிழ்ச்சியின் உச்சத்திற்கே சென்றுள்ளனர்.நிச்சயம் இப்படம் தமிழ் சினிமாவை தரம் உயர்த்தும் என ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.சோழர்கள் வாழ்வினை நம் கண் முன்னாள் காட்டியுள்ளார் மணிரத்தினம் செப்டம்பர் 30 வெளியாக உள்ள இப்படத்திற்கு இப்பொழுதே எதிர்பார்ப்பினை இந்த டீசர் கூட்டியுள்ளது.

Embed video credits ; Tips tamil

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in