The Indian Times

பகைவர்களை விரட்டி அடிக்கும் சோழர்கள் … பொன்னியின் செல்வன் TRAILER இதோ 

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர் மணிரத்தினம்.இவருக்கென தமிழ் சினிமாவில் பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது.பல வெற்றிப்படங்களை தமிழ் சினிமாவுக்கு அளித்துள்ளார் மணிரத்னம்.பல முன்னனி ஹீரோக்களை இயக்கி,பல முன்னணி நட்சத்திரங்களையும் அறிமுகப்படுத்தியுள்ளார் என்ற பெருமையும் இவருக்கு உண்டு.இவர் படங்கள் எப்பொழுதும் சற்றுமாறுபட்டே காணப்படும்,இதனால் தான் இவருக்கு இவ்வளவு ரசிகர்கள் கூட்டம் உள்ளது.பொன்னியின் செல்வன் ட்ரைலர் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

Advertisement

தற்போது இவரின் நீண்ட நாள் கனவு சோழ வரலாறு ஆன பொன்னியின் செல்வன் படத்தினை எடுக்க வேண்டும்,அதற்கான நேரம் தற்போது அமைந்ததால் அதனை சிறப்பாக செய்து முடித்துள்ளார்.மணிரத்தினத்தின் சொந்த நிறுவனமான மெட்ராஸ் டாக்கீஸ் லைக்கா நிறுவனத்துடன் இணைத்து இப்படத்தினை இரண்டு பாகங்களாக தயாரித்துள்ளார்.இப்படத்தில் ஜெயம்ரவி, கார்த்தி, விக்ரம், நாசர், பார்த்திபன்,ரகுமான்,த்ரிஷா,ஐஸ்வர்யா ராய் என பெரும் நட்சத்திர பட்டாளங்கள் நடித்துள்ளது.இப்படத்திற்கு ஏஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார்.அண்மையில் இப்படத்தின் டீசர் வெளியாகி நல்ல வரவேற்பினை பெற்றது.

Advertisement

தற்போது படம் செப்டம்பர் 30ஆம் தேதி வெளியாவதை முன்னிட்டு பொன்னியின் செல்வன் ட்ரைலரை படக்குழு வெளியிட்டுள்ளது.ட்ரைலர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.ரசிகர்கள் படம் வெற்றிபெற தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.இப்படத்தின் ட்ரைலரை நேற்று நடைபெற்ற விழாவில் ரஜினிகாந்த் மற்றும் உலகநாயகன் இணைந்து வெளியிட்டுள்ளார்கள்.

Embed video credits : TIPS TAMIL

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in