The Indian Times

வஞ்சம் அரண்மனை புகுந்தது…பாகுபலியை தூக்கியடித்த பொன்னியின் செல்வன் TRAILER இதோ

தமிழ் சினிமாவையே புரட்டிப்போட இருக்கும் பிரமாண்டமான பொன்னியின் செல்வன் திரைப்படம் செப்டம்பர் 30 ஆம் தேதி வெளியாக உள்ளது.இப்படத்திற்கு ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.தமிழ் சினிமாவில் பிற மொழி படங்கள் பெருமளவு வெற்றி பெற்று வருகிறது.தெலுங்கு,கன்னட படங்கள் ஆயிரம் கோடி ரூபாய் வசூலை சுலபமாக பெற்று வருகிறது.ஆனால் தமிழ் சினிமா தொடர்ந்து தோல்வியை சந்தித்து வருகிறது.தற்போது பல நடிகர்கள் பட்டாளத்துடன் உருவாகியுள்ள பொன்னியின் செல்வன் தமிழ் சினிமாவை மீண்டும் தலைநிமிர செய்யும் என ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது.பொன்னியின் செல்வன் ட்ரைலர் கீழே கொடுக்கப்பட்டுள்ளது

Advertisement

இயக்குனர் மணிரத்தினத்தின் நீண்ட நாட்கள் கனவு பொன்னியின் செல்வன்.இப்படத்தினை எப்படியாவது இயக்கிவிட வேண்டும் என ஆவலுடன் இருந்தார்.இறுதியாக அதற்கான நேரமும் வந்தது.இப்படத்தினை விக்ரம்,கார்த்தி,ஜெயம் ரவி,த்ரிஷா,ஐஸ்வர்யா ராய் மற்றும் ஜெயராம் என பலரையும் நடிக்க வைத்து சோழர்களின் பிரம்மாண்ட காவியத்தினை இரண்டு பாகங்களாக உருவாக்கியுள்ளார் மணிரத்தினம்.இப்படம் செப்டம்பர் 30 ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாக உள்ளது.இப்படத்தினை மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.ஏஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார்

Advertisement

இப்படத்தின் டீசர் மற்றும் பாடல்கள் அண்மையில் வெளியாகி நல்ல வரவேற்பினை பெற்றிருந்தது.அந்த வரிசையில் தற்போது படத்தின் ட்ரைலரை இன்று படக்குழு வெளியிட்டுள்ளது.இந்த நிகழ்ச்சி இன்று சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்றது.சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் உலகநாயகன் கமல்ஹாசன் கலந்துகொண்டு ட்ரைலரை வெளியிட்டுள்ளனர்.ட்ரைலர் பெரும் வரவேற்பினை ரசிகர்களிடம் பெற்றுள்ளது.ரசிகர்கள் படம் வெற்றிபெற தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Embed video credits : TIPS TAMIL

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in