The Indian Times

அமெரிக்காவில் புதிய சாதனையை படைத்த முதல் தமிழ்படம் பொன்னியின் செல்வன்.. என்ன சாதனை தெரியுமா?

தமிழ் சினிமா ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்த திரைப்படம் பொன்னியின் செல்வன்.காரணம் தமிழர்களின் வீரத்தினை உலகம் முழுவதும் தெரியப்படுத்த போவது என்பதால்.மேலும் பல மொழி சினிமாக்களும் ஆயிரம் கோடி வசூலை செய்து வரும் நிலையில் இப்படமும் ஆயிரம் கோடி வசூலை செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் உலகம் முழுவதும் வெளியாகியுள்ள திரைப்படம் பொன்னியின் செல்வன்.இப்படத்தினை மெட்ராஸ் டாக்கீஸ் மற்றும் லைகா நிறுவனம் இணைந்து தயாரித்துள்ளது.படத்தில் கார்த்தி,விக்ரம்,ஜெயம்ரவி ,பிரபு,ஜெயராம்,ஐஸ்வர்யா ராய்,த்ரிஷா ஆகியோர் நடித்துள்ளனர்.ஏஆர் ரஹ்மான் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

Advertisement

இப்படம் இன்று உலகம் முழுவதும் வெளியாகியுள்ளது.தமிழகத்தில் மட்டும் சுமார் 700க்கும் அதிகமான திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.முன்பதிவு தொடங்கிய உடனே இப்படத்திற்கான ஒரு வார காட்சிகள் தமிழகத்தில் விற்பனையாகி விட்டது. எந்த படமும் செய்யாத சாதனையை இப்படம் செய்து அசத்தி உள்ளது.மேலும் ஒரே நாளில் உலகம் முழுவதும் 80 கோடி வரை வசூல் செய்துள்ளது.பொன்னியின் செல்வன் 500 கோடி பட்ஜெட்டில் உருவாகியுள்ளதாக கூறப்படுகிறது.

Advertisement

இதுவரை இப்படம் 430 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.அதிலும் குறிப்பாக அமெரிக்காவில் இப்படம் சுமார் 50 கோடி வரை வசூலித்துள்ளதாம்.இதுவரை எந்த திரைப்படமும் வெளிநாட்டில் செய்யாத சாதனையை பொன்னியின் செல்வன் நிகழ்த்தியுள்ளதால் ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சியாக உள்ளனர்.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in