The Indian Times

பேசிக்கொண்டிருக்கும் பொழுதே TENSION ஆகி கத்திய இயக்குனர் பிரபு சாலமன்….

பிரபல இயக்குனராக தமிழ் சினிமாவை வலம் வருபவர் பிரபு சாலமன்.இவர் முதன் முதலாக 1999 ஆம் ஆண்டு கண்ணோடு காண்பதெல்லாம் என்ற படத்தினை இயக்கி சினிமாவுக்குள் இயக்குனராக அறிமுகம் ஆகினார்.இப்படத்திற்கு பிறகு தொடர்ந்து பல படங்களை இயக்கியுள்ளார்.ஆனால் எந்த படமும் இவருக்கு வெற்றியை தரவில்லை.பின்னர் தொடர்ந்து இயக்குனராக ஜெயிக்க போராடிய பிரபு சாலமனுக்கு இதுவரை தராத வெற்றியை 2010ஆம் ஆண்டு வெளியாகிய மைனா படம் கொடுத்தது.இப்படம் மாபெரும் வரவேற்பினை ரசிகர்களிடம் பெற்றது.இப்படத்தின் மூலம் ஒட்டுமொத்த சினிமாவையும் திரும்பி பார்க்க வைத்தார் பிரபு சாலமன் என்று தான் கூறவேண்டும் .இப்படத்தின் வெற்றிக்கு பிறகு காடுகள், மலைகள் பேருந்து போன்றவைகளை தனது படத்தில் முக்கிய ஒன்றாக வைத்துக்கொள்ள தொடங்கினர். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

Advertisement

இப்படத்தின் வெற்றிக்கு பிறகு நடிகர் விக்ரம் பிரபுவை வைத்து கும்கி படத்தினை இயக்கினார்.இப்படம் நல்ல வரவேற்பினை பெற்று முன்னணி இயக்குனராக உருவெடுத்தார்.இப்படத்திற்கு பிறகு இவர் பல படங்கள் இயக்கியும் இவருக்கு கிடைத்தது தோல்வி மட்டுமே,தற்போது இவர் நடிகர் அஸ்வின் மற்றும் கோவை சரளாவை வைத்து செம்பி எனும் படத்தினை இயக்கியுள்ளார்.இப்படத்திற்கு இசையமைப்பாளர் நிவாஸ் பிரசன்னா இசையமைத்துள்ளார்.இன்று திரையரங்குகளில் இப்படம் வெளியாகியுள்ளது.ரசிகர்களிடம் நல்ல கருத்துக்களை இப்படம் பெற்றுவருவதால் படக்குழுவினர் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர்.

Advertisement

இந்நிலையில் இன்று காலை பிரபு சாலமன்,கோவை சரளா மற்றும் அஸ்வின் ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்துள்ளனர்.இந்த செய்தியாளர் சந்திப்பில் பிரபு சாலமன் படத்தில் நடித்த அனைவர்க்கும் நன்றி சொல்லி கொண்டிருந்த வேளையில் அவரை பேச விடமால் அதிக சத்தம் எழுப்பியதால் கோவத்தில் கத்தியுள்ளார்.இந்த வீடியோ ரசிகர்களிடம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது,மேலும் பிரபு சாலமன் இவ்வளவு பெரிய கோவக்காரரா பார்த்தல் அப்படி தெரியவே இல்லையே ஆச்சரியமாக உள்ளதே என கருத்துக்களை ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர்.

Embed video credits : THI CINEMAS

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in