The Indian Times

LOVE TODAY படத்திற்கு மக்கள் அளித்த வரவேற்பினை கண்டு கண்கலங்கி தயாரிப்பாளரை கட்டிப்பிடித்த பிரதீப் ரங்கநாதன்…

நடிகர் ஜெயம் ரவியை வைத்து கோமாளி படத்தினை இயக்கி தமிழ் சினிமாவுக்குள் இயக்குனராக களம் இறங்கியவர் பிரதீப் ரங்கநாதன்.இப்படத்தில் இவருக்கு பெரும் வரவேற்பு கிடைத்தது.இப்படத்தினை தொடர்ந்து கதாநாயகனாக சினிமாவில் நடிக்க முடிவு செய்து கதையை எழுத தொடங்கினார்.முன்னதாக இவர் இயக்கிய குறும்படத்தில் இருந்து கதையை எடுத்து அதனை விரிவாக்கம் செய்து லவ் டுடே என படத்திற்கு தலைப்பையும் வாங்கி படம் இயக்கி நடிக்க தொடங்கினார்.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது 

இவருக்கு தங்களது முழு சப்போர்ட்டயும் ஏஜிஎஸ் தயாரிப்பு நிறுவனம் கொடுத்தது.இப்படத்தில் இவருடன் நடிகை ராதிகா சரத்குமார்,யோகி பாபு,சத்யராஜ்,ரவீனா மற்றும் ஆஜீத் ஆகியோர் நடித்துள்ளனர்.யுவன் சங்கர் ராஜா படத்திற்கு இசையமைத்துள்ளார்.இப்படத்தின் ட்ரைலர் வெளியாகி இப்படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பினை ஏற்படுத்தியது.இன்று இப்படம் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது

Advertisement

ரசிகர்கள் இப்படத்திற்கு நல்ல வரவேற்பினை கொடுத்து வருகின்றனர்.இன்று இப்படத்தினை தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தியுடன் திரையரங்கில் காண பிரதீப் சென்றார்.இவர் கதாநாயகனாக நடித்த முதல் படத்திற்கு ரசிகர்கள் அளித்த ஆதரவினை கண்டு கண் கலங்கி தயாரிப்பாளரை கட்டிபிடித்துள்ளார்.இந்த வீடியோ தற்போது இன்ஸ்டாகிராமில் பெருமளவு வைரலாகி வருகிறது

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in